சென்னையில் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைந்த வண்ணமே இருக்கின்றன. இந்த விலை குறைவு இந்த மாதம் முழுவதும் அப்படியே நீடிக்குமா அல்லது ஈரான் போர் முடிந்தவுடன் மீண்டும் விலைகள் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விடுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
சென்னை பொறுத்தவரை நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,710 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 60 ரூபாய் விலை குறைந்து 14, 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை நேற்று, இன்று ஆகிய இந்த இரண்டு நாட்களிலேயே ஒரு கிராம் 110 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. கடந்த ஐந்து வர்த்தக நாட்கள் என பார்க்கும் போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 470 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது.

சென்னையில் நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,17,680 ரூபாய்க்கு விற்பனையானது இன்று 480 ரூபாய் விலை சரிவடைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3760 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. 10 கிராம் தங்கம் 1,46,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 66 ரூபாய் விலை குறைந்து 15, 982 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1, 27,856 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.70 விலை குறைந்து 12,330 ரூபாய்க்கும் ஒரு சவரன் 98,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியை பொருத்தவரை இன்றைய தினம் விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம்முக்கு 4 ரூபாய் சரிந்து 276 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று ஒரு கிராம் வெள்ளி 4 ருபாய் விலை உயர்ந்து 280 ரூபாய்க்கும் ஒரு கிலோவுக்கு 4000 வரை 2,80 ,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வருகின்றன. இந்த மாதம் முழுவதும் இதே நிலை நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் அமெரிக்க டாலர் வலுவடைந்துவிட்டது. எனவே அமெரிக்க மத்திய வங்கி மற்றும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அடுத்ததாக வட்டி குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் வெள்ளியில் செய்த முதலீடுகளை எல்லாம் லாபம் எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். இதுதான் தங்கம், வெள்ளி விலை சரிவடைவதற்கு முக்கிய காரணம். இன்னும் சில வாரங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இப்படி திருத்தத்திலேயே தான் இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். போர் முடிந்து அமெரிக்க டாலர் வலுவிழக்கும் பட்சத்தில் தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஆனால் உடனே நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications