ஈரான் போர் இந்தியாவில் சாமானிய மக்களையே நேரடியாக பாதித்து வருகிறது. ஒரு புறம் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது, மற்றொருபுறம் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. இத்தகைய சூழ்நிலையில் ஆறுதல் தந்து வந்த தங்கமும் தற்போது தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி இருக்கிறது.
ஈரான் போருக்கு மத்தியிலும் கடந்த வாரம் முழுவதுமே சரிவடைந்து வந்த தங்கம் விலை திடீரென இன்று உயர்ந்து விட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்த நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்துவிட்டது. நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15,050 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 800 ரூபாய் விலை உயர்ந்து 1,20 ,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1000 ரூபாய் விலை உயர்ந்து 1,50,500 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 109 ரூபாய் விலை உயர்ந்து 16,418 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஒரு சவரனுக்கு 872 ரூபாய் விலை உயர்ந்து 1, 31,344 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 18 கேரட் தங்கம் மட்டும் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 110 ரூபாய் விலை சரிந்து 12,890 ரூபாய்க்கும் ஒரு சவரன் 880 ரூபாய் விலை சரிந்து 1,03,120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை பல மடங்கு உயரப்போகிறது என அனைவரும் அச்ச பட்ட நிலையில் கடந்த வாரம் முழுவதுமே தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களுக்கு பெரிய நிம்மதியை தந்தது.
கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவடைந்தது. மொத்தமாக 5 நாட்களில் கிராமுக்கு 815 ரூபாயும் சவரனுக்கு 6520 ரூபாயும் குறைந்தது. ஆனால் சனிக்கிழமை மீண்டும் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தங்கம் விலை சரிந்த நிலையில் போன வாரத்தைப் போலவே இந்த வாரமும் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று விலை உயர்ந்திருக்கிறது.
சென்னையில் தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்வு கண்டிருக்கிறது ஒரு கிராமுக்கு 10 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு ஒரு அவுன்ஸ் 5161 டாலர்களாகவும் வெள்ளியின் விலை 88.35 டாலர்களாகவும் விலை உயர்ந்துள்ளது. இதுவே இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications