தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 3 முறை மாறிய விலை!! சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

தமிழ்நாட்டில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை தொடங்கி இன்று காலை வரை 24 மணி நேரத்தில் மூன்று முறை மாற்றம் அடைந்திருக்கிறது. மக்கள் தங்கம் வாங்குவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தி நேற்று அறிவித்தது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து நேற்று காலை தமிழ்நாட்டில் நகை விற்பனையாளர்கள் சங்கம் தங்கம், வெள்ளி விலைகளை திடீரென பல மடங்கு உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை தந்தன. அதாவது நேற்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,400 ரூபாய்க்கு விற்பனையானது. இது முந்தைய நாளை விட 1000 ரூபாய் அதிகம். இதனால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை விலை குறைக்கப்பட்டது.

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 3 முறை மாறிய விலை!! சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை என்ன?

நேற்று காலை 15,400 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் மாலை 400 ரூபாய் குறைந்து 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று காலை மீண்டும் விலை உயர்ந்துவிட்டது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 50 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் என பார்க்கும் போது நேற்று காலை ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,23,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே நேற்று மாலை 1,20,000 ரூபாய் என விலை குறைந்தது. அதுவே தற்போது சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

வெள்ளி விலையும் மாற்றம் அடைந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று காலை தடாலடியாக 30 ரூபாய் விலை உயர்ந்து 330 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை 10 ரூபாய் விலை குறைந்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 5 ரூபாய் விலை குறைந்து 315 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 3.15 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

சென்னை மட்டுமல்ல கோவை, மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

பொதுமக்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவது தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால் தங்கம் இறக்குமதி குறையும் இதனால் இந்தியா தன் கைவசம் உள்ள அமெரிக்க டாலரை தங்கும் இறக்குமதிக்கு செலவு செய்யாமல் அத்தியாவசிய பொருளான கச்சா எண்ணெய் வாங்குவதற்கு செலவு செய்யும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையாக இருந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+