தங்கம் விலை வீழ்ச்சி!! ஒரே நாளில் நடந்த அதிசயம்!! இன்னைக்கு கடைக்கு போனா பல ஆயிரம் மிச்சமாகும்!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென விலை உயர்ந்தது. இதனால் மக்கள் கவலை அடைந்த நிலையில் இன்றைய தினம் பெரிய அளவில் விலை குறைந்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14, 500 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே படிப்படியாக விலை குறைந்து திங்கள் கிழமை அன்று 14,070 ரூபாய் என விற்கப்பட்டது. இனி தங்கம் விலை தொடர்ந்து சரியும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் நேற்று தடாலடியாக விலை உயர்ந்தது. மீண்டும் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 14,200 ரூபாய் என ஆனது. இந்த சூழலில் இன்றைய தினம் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சி!! ஒரே நாளில் நடந்த அதிசயம்!! இன்னைக்கு கடைக்கு போனா பல ஆயிரம் மிச்சமாகும்!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 400 ரூபாய் விலை குறைந்து 13,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது. அதே வேளையில் ஒரு சவரன் தங்கம் நேற்று 1,13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 3,200 ரூபாய் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

ஜூன் மாதத்திலேயே முதன் முறையாக தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3000 ரூபாய்க்கு மேல் விலை சரிந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 830 ரூபாயும் ஒரு சவரனுக்கு 6,640 ரூபாயும் விலை குறைந்துள்ளன.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 436 ரூபாய் விலை குறைந்து 15,055 ரூபாய்க்கும் 10 கிராம் 4,360 ரூபாய் விலை குறைந்து 1,50,550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் 11, 570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 92,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 260 க்கும் ஒரு கிலோ 2.6 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended For You

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை , திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,10,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் ஈரான்போர் தீவிரமடையும் சூழல் உண்டாகி இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலரை நோக்கி முதலீடுகளை அனுப்புவதால் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்துள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+