சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் விலை ஜூன் 9ஆம் தேதி அன்று திடீரென விலை உயர்ந்தது. இதனால் மக்கள் கவலை அடைந்த நிலையில் நேற்று, இன்று என தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14, 500 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே படிப்படியாக விலை குறைந்து நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிராம் தங்கம் விலை 14000 ரூபாய்க்கு கீழ் சென்றது. ஒரு சவரன் 1.10 லட்சம் என ஆனது. இந்த சூழலில் இன்றைய தினமும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 300 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணதங்கம் 13,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் 13,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சவரன் தங்கம் நேற்று 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1.10 லட்சத்திற்கும் கீழ் விலை சென்றுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு 2,400 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் 1,08,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு1,130 ரூபாயும் ஒரு சவரனுக்கு 9,040 ரூபாயும் விலை குறைந்துள்ளன. மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை ஒரு சவரன் 1.10 லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 327 ரூபாய் விலை குறைந்து 14,728 ரூபாய்க்கும் 10 கிராம் 3,270 ரூபாய் விலை குறைந்து 1,47,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11, 310 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 90,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.6 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை , திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலும் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் ஈரான் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலரை நோக்கி முதலீடுகளை அனுப்புவதால் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்துள்ளன. உலக சந்தையிலும் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத சரிவை கண்டது.
வீட்டு விஷேசங்களுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்றைய தினம் கடைக்கு சென்றால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை எல்லாம் சேர்த்து பல ஆயிரம் மிச்சப்படுத்தலாம், அதாவது ஒரு பவுன் நகையே 1.24 லட்சத்திற்கே கிடைக்கும். இதுவே கடந்த வாரம் வாங்கி இருந்தால் 1.33 லட்சமாக செலுத்தி இருப்பீர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

