சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை தங்கம் விலை மாற்றம் கண்டுள்ளது. நேற்று காலை சரிவடைந்து நிம்மதியை தந்த தங்கம் நேற்று மாலையே தடாலடியாக உயர்ந்தது. இந்த சூழலில் இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று காலை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 140 ரூபாய் விலை குறைந்து 13,810 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதுவே நேற்று மாலை 180 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 13,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் குறைந்து மாலையில் தங்கம் விலை உயர்ந்ததால் மக்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தங்கம் விலை தற்போது சரிந்துள்ளது.

காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்று மாலையுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை இன்று கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் என பார்க்கும் போது 1,10,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரத்துடன் ஒப்பிட்டால் தங்கம் விலை சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் சரிவை கண்டுள்ளது. நேற்று காலை 255 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை 5 ரூபாய் விலை உயர்வு கண்டு 260 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே தற்போது 5 ரூபாய் விலை சரிந்து 255 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகள் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. செவ்வாய் இரவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என டிரம்ப் விடுத்த மிரட்டலால் நேற்று காலை எண்ணெய் விலைகள் உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தங்கம் விலை சரிந்தது. அதுவே நேற்று மதியம் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் 45 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இதனால் மாலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து தங்கம் விலை உயர்ந்தது.
இந்த சூழலில் டிரம்ப் இன்று இரவுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஒரு நாளில் இரவிலேயே ஈரான் அழிக்கப்பட்டு விடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் நாளைய தினம் அமெரிக்கா ஈரான் மீது கடும் தாக்குதலை தொடுக்கும் என அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன, தங்கம், வெள்ளி விலைகள்குறைய தொடங்கியுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications