ஜூலை 1ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 800 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்றைய தினம் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஒரு சவரன் 1.33 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியது. ஜனவரி மாதத்திற்கு பின் ஈரான் போர் காரணமாக படிபடியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் ஒரு கிராம் 13,100 ரூபாய் என சரிந்துள்ளது. வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலை சவரனுக்கு 29,000 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சராசரியாக 10% குறைந்திருந்தது. ஜூலை மாதமும் விலை குறைவிலேயே தொடங்கி இருப்பதால் இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜூன் மாதத்தை போலவே இந்த மாதமும் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தால் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் செல்ல வாய்ப்புள்ளது.
சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,291 ரூபாய்க்கும், 10 கிராம் 1,42,910 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 10,940 ரூபாய்க்கும், ஒரு பவுன் 87,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இன்றைய விலை நிலவரத்திற்கு உங்கள் கையில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் 6.73 கிராம் எடை கொண்ட 22 கேரட் ஆபரண தங்கத்தை நீங்கள் வாங்கலாம். இது செய்கூலி, ஜிஎஸ்டி சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துபவர்கள் இன்றைய வாய்ப்பை தவற விடாமல் தங்கம், வெள்ளியை வாங்கி வைப்பது நல்லது. அதே போல தங்கத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய எண்ணுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

