சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஈரான் போர் நிலவரம் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஈரான் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என கூறுகிறது.
ஈரான் போர் விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக சந்தையில் தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக சில்லறை விற்பனையில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆபரண தங்கம் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 14,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,14,400 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய தினம் 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. 22 கேரட் தங்கம் 10 கிராம் 1,42,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று தங்கம் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது வெள்ளி விலை குறைந்தது. ஆனால் இன்றைய தினம் தங்கம் விலை குறைந்து இருக்கிறது வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி 2.75 லட்சத்திற்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக தான் இருக்கும். ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் தங்கம் விலை ஏறும் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் தங்கம் விலை குறையும். எப்படி இருந்தாலும் அடுத்த 2 -3 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த விலை குறைவு வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

