தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு நாளில் தங்கம் விலை சரிந்து பொதுமக்களுக்கு நல்ல செய்தியை தந்துள்ளது. சென்னையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 14,160 ஆக உள்ளது. நேற்று ஒரு கிராம் 14,250 ரூபாயாக விற்கப்பட்ட தங்கம் இன்று 90 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 1,14,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்லையில் இன்று 720 ரூபாய் விலை சரிந்து 1,13,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக தங்கம் விலை சரிவடைந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாயும் சவரனுக்கு 1600 ரூபாயும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதே வேளையில் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 15,448 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ளது நகை வாங்குவோருக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சென்னையில் தங்கத்தின் வி சரிவில் தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் ஏப்ரல் 19இல் தங்கம் அதன் உச்ச விலையை எட்டியிருந்தது. அதன் பிறகு படிப்படியாக விலை குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் இன்னும் நீடிக்கிறது. அமைதி பேச்சுவார்த்தை குறித்த தெளிவு ஏற்படாமல் உள்ளது. இதனால் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளதால் தங்கம் விலை பெரிய ஏற்றம் அடையாமல் உள்ளது.
வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் மற்றும் பணவீக்கக் கவலைகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஈரான் போர் அமைதி பேச்சும் விலை போக்கை முடிவு செய்யும்.
18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 70 ரூபாய் விலை குறைந்து 11,810 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் விலை குறைந்து 94 ,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது .நேற்று ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 5 ரூபாய் விலை குறைந்து 270 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருந்து வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

