வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. ஈரான் போர் அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளதால் இதன் எதிரொலியாக உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.
சில்லறை விற்பனையிலும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் இன்று தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 40 ரூபாய் விலை குறைந்து 14,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் நேற்று 1,12,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 320 ரூபாய் குறைந்து 1,12,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 400 ரூபாய் விலை குறைந்து 1,40,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரையில் ஒரு கிராம் 44 ரூபாய் விலை சரிந்து 15,338 ரூபாய்க்கும் ஒரு சவரன் 352 ரூபாய் விலை குறைந்து 1,22,704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் விலை குறைந்து 11,730 ரூபாய்க்கும் ஒரு சவரன் 240 ரூபாய் விலை சரிவடைந்து 93, 840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி நேற்று ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1, 51,552 ரூபாயாக சரிவை சந்தித்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 2,37,850 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
ஈரான் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. 20 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அமைதி பேச்சு வார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அமெரிக்கா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் 100 டாலரை கடந்து விற்பனையாக தொடங்கின. எனவே முதலீட்டாளர்கள் அதிக அளவில் கச்சா எண்ணெயில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. ஈரானில் போர் தீவிரமடையும் பட்சத்தில் மேலும் தங்கத்தின் விலை குறையும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications