சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் ஒரே நாளில் ஜம்ப் அடித்து இருக்கிறது.
தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்றைய தினம் பெருமளவில் உயர்வு கண்டிருக்கின்றன. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் ஒரு கிராம் 14 ,100 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று ஒரே நாளில் 230 ரூபாய் விலை உயர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,12, 800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 1840 ரூபாய் விலை உயர்ந்து 1,14,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இப்படி உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் சுத்த தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது. நேற்றுவிட இன்று ஒரு கிராமுக்கு 251 ரூபாய் விலை உயர்வு கண்டு 15 , 633 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 2008 ரூபாய் விலை உயர்ந்து 1,25,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கமும் இன்று விலை உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 180 ரூபாய் விலை கூடி 11,950 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1440 ரூபாய் விலை கூடி 95 ,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் விலை மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஒரே நாளில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 285 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்றைய தினம் 15 ரூபாய் விலை கூடி 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 15 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு கண்டு 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
ஈரான் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவிலேயே இருந்து வந்த தங்கம், வெள்ளி விலைகள் மீண்டும் உயர தொடங்கி இருக்கிறதா என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை ஏறுமுகமாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

