சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. வெள்ளியின் விலையும் சரிந்திருப்பதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயரவே இல்லை. திங்கள் கிழமை அதாவது ஜூன் 1ஆம் தேதியே தங்கம் விலை சரிவடைந்தது. எனவே இந்த மாதம் முழுவதும் தங்கம் விலை இப்படி சரிவிலேயே இருக்கும் என்று தான் மக்கள் எதிர்பார்த்தனர். அதை போலவே இந்த 5 நாட்களுமே தங்கம் விலை உயரவே இல்லை.

ஜூன் 1ஆம் தேதி திங்கள் கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 130 ரூபாய் விலை குறைந்து 14,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பின்னர் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு தினங்களுக்கு விலையில் மாற்றமில்லை. வியாழக்கிழமையான நேற்று 20 ரூபாய் குறைந்து 14,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,430 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் விலை குறைந்து 1,15,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தேதிக்கு ஒரு பவுன் நகை வாங்க 1,33,000 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.
22 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று சென்னையில் ஒரு கிராம் 15,796 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1,57,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,105 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,840 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. நேற்று 285 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 2.85 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. ஜூன 1ஆம் தேதி 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி பின்னர் விலை சரிந்து 280 ரூபாயாக உள்ளது.
ஜூன் மாத தொடக்கம் முதலே தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைவிலேயே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை குறைந்து மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது. ஈரான் போர் தீவிரமடைந்து அமெரிக்காவும் ஈரானும் தீவிரமாக மோதி கொள்ளும் பட்சத்தில் மீண்டும் தங்கம் விலை சரியும். ஆனால் அமைதி ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை சரியும் போது தங்கம் விலை உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

