குறைந்தது தங்கம் விலை!! உங்க ஊரில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்திருக்கிறது. ஈரான் போர் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்புகளும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாரத் தொடக்கமான மே 18ஆம் தேதி அன்று சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தடாலடியாக விலை உயர்ந்து 14,870 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து புதன்கிழமை அன்று 120 ரூபாய் விலை சரிந்து 14,750 ரூபாய்க்கு தங்கம் விற்கப்பட்டது. மே 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 14,810 ரூபாய்க்கு விற்பனையானது.

குறைந்தது தங்கம் விலை!! உங்க ஊரில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன தெரியுமா?

இந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. நேற்று சென்னையில் கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து 22 கேரட் ஆபரண தங்கம் 14,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,730 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் தங்கம் நேற்று ஒரு சவரன் 1,18,240 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 1,17, 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

Also Read

அதேவேளையில் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட அடுத்த நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்தன. ஆனால் அதன் பிறகு படிப்படியாக விலை குறைந்துவிட்டது. வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3 லட்ச ரூபாய்க்கும் விற்பனையானது. இதனை அடுத்து விலை ஏறி இறங்கி வந்த வெள்ளி இன்றைய தினம் 295 ரூபாய்க்கு செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்து 16,069 ரூபாய்க்கும் 10 கிராம் 550 ரூபாய் விலை சரிவடைந்து 1,60,690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு சவரன் 98,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

இன்று சனிக்கிழமை என்பதால் நாளைய தினமும் இதே விலைக்கு தான் தங்கம் ,வெள்ளி விற்பனை செய்யப்படும். சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான கோவை, திருச்சி ,மதுரை என பல்வேறு நகரங்களிலும் இதே விலைக்கு தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரம் ஈரான் போர் முடிவதற்கான அறிகுறிகள் தென்படும் போது தங்கத்தின் விலை உயரும், ஒருவேளை ஈரான் போல் தீவிரமடைந்தால் தங்கத்தின் விலை மேலும் குறையும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+