தங்கம் விலை 3ஆவது நாளாக உயர்வு!! அட்சய திருதியை நெருங்கும் நிலையில் விலை அதிகரிப்பு!!

வரும் ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் இந்த வாரத்தில் இதுவரையிலான நான்கு வர்த்தக நாட்களில் திங்கட்கிழமை தவிர்த்து செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று வர்த்தக நாட்களிலுமே தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் திங்கட்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை சரிவடைந்து 14, 060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை ஆன நேற்று ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 14,220 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை உயர்ந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே வேளையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,14,560 ரூபாயாக உயர்ந்தது.

தங்கம் விலை 3ஆவது நாளாக உயர்வு!! அட்சய திருதியை நெருங்கும் நிலையில் விலை அதிகரிப்பு!!

இந்த சூழலில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுவே இன்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் என பார்க்கும்போது 320 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,14,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

வெள்ளியை பொறுத்தவரை அதன் விலையில் இன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை நேற்று ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினமும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஈரான் போர் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருக்கிறது. இது தரப்பும் கூடிய விரைவில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாக இருக்கக்கூடிய சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் உயராமல் இருக்கின்றன.

Recommended For You

இதனால் தங்கத்தின் விலை லேசாக உயர்ந்திருக்கிறது. அட்சய திருதியைக்கு நகைக்கான டிமாண்ட் இருக்கும் என்பதாலும் நகை விற்பனையாளர்கள் தங்கத்தின் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போக்கு எப்படி இருக்குமோ அதை பொறுத்து தங்கம், வெள்ளி விலை மாறும்.

போர் நிறுத்தம் உறுதியானால் தங்கம் விலை உயரும், இல்லை தீவிரமடைந்தால் விலை சரியும். ஆனால் தற்போது போர் நிறுத்தம் உறுதியாவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக தென்படுகின்றன என்பதால் தங்கம் விலை உயர்வுக்கான வாய்ப்புகளே அதிகரித்துள்ளன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+