தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒட்டுமொத்த மாநிலமும் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வியோடு காத்திருக்கின்றனர். இதற்கிடையே தங்கம் விலை பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஒரு சர்ப்பிரைஸை தந்திருக்கிறது.
சென்னையில் வாரத்தின் இறுதி நாளான இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்றை போலவே இன்றும் 14,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1,13,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் மே 1ஆம் தேதி தொடங்கி தற்போது வரை தங்கத்தின் விலை பெரிய அளவில் மாற்றம் காணவில்லை.

மே 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,920 ரூபாய்க்கு விற்பனையானது. மே 2ஆம் தேதி அது 14,000 ரூபாயாக உயர்ந்தது. இதனை அடுத்து நான்காம் தேதி வரை விலை மாற்றம் இல்லை. மே 5ஆம் தேதி 13,820 ரூபாய் என விலை சரிவடைந்தது. மே 6ஆம் தேதியில் இருந்து விலை உயரத் தொடங்கியது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 14,150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
மே 1ஆம் தேதி நிலவரத்தோடு ஒப்பிட்டால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 230 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1840 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 15,436 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,810 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஈரான் போர் விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் குழப்பமான சூழலே இன்னும் நீடிக்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஏற்படுமா இல்லையா என்பது தெளிவாக தெரியாததால் முதலீட்டாளர்களே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதனால் தங்கம் சந்தை கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதுதான் இந்தியாவில் சில்லறை விற்பனையிலும் எதிரொலிக்கிறது.
வரும் வாரத்தில் ஈரான் விவகாரத்தில் திருப்புமுனை ஏற்பட்டு போர் அமைதி ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை சரிந்தால் தங்கம் விலை உயரும். இல்லை என்றால் தங்கம் விலை தற்போது உள்ளதை போலவே லேசாக ஏறுவது, இறங்குவது என காணப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

