ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை சென்னை சேர்ந்த நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தங்கத்தின் விலையை குறைத்தது. அந்த வகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்ததா , சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் நேற்றைய தினம் காலை, மாலை என இரண்டு வேளையும் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டது. அப்படி பார்க்கையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்து 13,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 1,11,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13900 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து 30ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டது. சென்னையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 14,050 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து இறங்குவதும் ஏறுவதுமாக இருந்து வந்த தங்கம் அதிகபட்சமாக ஏப்ரல் 18ஆம் தேதி அன்று ஒரு கிராம் 14,360 ரூபாய் என்ற விலையை எட்டியது.
இதன் பிறகு சரிவடைந்த தங்கம் தொடர்ந்து 2 நாட்களாக விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் ஒரு கிராமுக்கு 330 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 2,640 ரூபாய் விலை சரிவடைந்திருக்கிறது.
இன்றைய தினம் வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.6 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் தான் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்து 260 என ஆனது. வெள்ளியை பொருத்தவரை ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு கிராம் 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு விலை ஏறுவது இறங்குவதுமாக இருந்தது ஏப்ரல் 18ஆம் தேதி அன்று ஒரு கிராம் 280 ரூபாய் தொட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைந்துள்ளது. ஈரான் போர் நிலவரமே இதற்கு காரணம். இந்நிலையில் மே மாதத்தில் ஈரான் போர் நிலவரம் ரஷ்யாவின் தங்கம் ஏற்றுமதி கட்டுப்பாடு, அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் வட்டி முடிவுகள் ஆகியவை தான் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

