ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகளுக்கு ஏற்ப ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம் விலை இன்றைய தினம் மக்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தந்திருக்கிறது. சென்னையில் வழக்கமாக வாரத்தின் ஆறு நாட்களும் தங்கத்தின் விலை ஏறும் இறங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தான் தங்கம் விலை மாறாமல் இருக்கும். ஆனால் அதிசயமாக செவ்வாய்க்கிழமையான இன்று தங்கம் விலையை நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மாற்றவில்லை.
சென்னையில் நேற்றைய விலைக்கே தங்கம் விலை விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை குறைந்து 14,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்றைய தினமும் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஒரு கிராம் தங்கம் 14,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை பண்டிகையொட்டி தங்கத்தின் விலை பெரும் அளவில் உயரம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு தங்கத்தின் விலை உயரவில்லை. ஞாயிற்றுக்கிழமையான அட்சய திருதியை நாளிலும் தங்கத்தின் விலை மாற்றம் அடையாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னையில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஒரு நாள் ஏறுவது ஒரு நாள் இறங்குவது என ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 15,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,24, 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,56,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தற்போது மக்கள் மத்தியில் 18 கேரட் தங்க நகைகளுக்கு மவுஸ் அதிகரித்துள்ளது அந்த வகையில் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,855 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்க விலையில் மாற்றம் இல்லை என்றால் வெள்ளி விலை மாறி இருக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் வெள்ளி விலை குறைந்திருக்கிறது. நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி இன்று ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை குறைந்து 275 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுமா என்பது குறித்த ஒரு தெளிவான முடிவு கிடைக்காமல் இருப்பதால் தங்கம், வெள்ளி விலையில் பெரிய அளவு ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் அப்படியே நீடிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

