Gold Rate: 4 நாட்கள் விலை சரிவு முடிவுக்கு வந்தது..!! வார இறுதிநாளில் வேலையை காட்டிய தங்கம்..!!

சென்னையில் இந்த வாரம் தொடக்கம் முதல் படிப்படியாக குறைந்த வந்த தங்கம் விலை இன்றைய தினம் சடாரென உயர்ந்துவிட்டது. இதன் மூலம் தங்கம் விலை சரிவு முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

திங்கள்கிழமை முதலே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து தான் வந்தது. எனவே மேலும் விலை குறைய தான் போகிறது என மக்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அதற்கு மாறாக இன்று விலை உயர்ந்துவிட்டது. கடந்த 5 நாட்களில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை எப்படி மாற்றமடைந்தது என முதலில் தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 20 , திங்கள் - ரூ. 14,300 (ரூ.60 குறைவு)

ஏப்ரல் 21, செவ்வாய் - ரூ. 14,300 (விலை மாற்றமில்லை)

ஏப்ரல் 22, புதன் - ரூ. 14,250 (ரூ.50 குறைவு)

ஏப்ரல் 23, வியாழன் - ரூ. 14,160 (ரூ.90 குறைவு)

ஏப்ரல் 24, வெள்ளி - ரூ. 14, 100 (ரூ.60 குறைவு)

Gold Rate: 4 நாட்கள் விலை சரிவு முடிவுக்கு வந்தது..!! வார இறுதிநாளில் வேலையை காட்டிய தங்கம்..!!

இப்படி இந்த வாரம் முழுவதுமே குறைந்து வந்த தங்கம் இன்று திடீரென விலை உயர்ந்து இருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 1,12,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 800 ரூபாய் விலை கூடி1,13,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Also Read

சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 109 ரூபாய் விலை உயர்ந்து 15,491 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1090 ரூபாய் விலை கூடி 1,54,910 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராம் 90 ரூபாய் உயர்ந்து 11,850 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 94,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 5 ரூபாய் விலை கூடி 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

ஈரான் போர் தொடர்பான அறிவிப்புகள் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இந்த வாரம் முழுவதுமே போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா, அமைதி பேச்சுவார்த்தை நடக்குமா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தங்கம் விலை உயரவில்லை, ஆனால் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான் சிக்னல்களை தந்துள்ளன. எனவே தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+