சென்னையில் இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்திருக்கிறது. ஈரான் போர் தொடங்கியது முதலே தொடர்ந்து சரிவிலேயே இருந்து வந்த தங்கம் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் ஏறுவது ஒரு நாள் இறங்குவது என ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் குறைந்த தங்கம் விலை இன்றைய தினம் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,060 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 14,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்துவிட்டது.

ஒரு சவரன் என பார்க்கும்போது 1280 ரூபாய் தங்கத்தின் விலை இன்று உயர்வு கண்டுள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1,12,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது அதுவே இன்று 1,13,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 24 கேரட் தூய தங்கமும் கிராமுக்கு 175 ரூபாய் உயர்ந்து 15,513 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 135 ரூபாய் விலை கூடி 11,865 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஈரான் போர் தொடர்பான முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் நேற்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிந்தது. இதுதான் நேற்று சென்னையில் தங்கம் விலை உயர காரணமாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதனால் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உயர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை லேசாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அட்சய திருதியை பண்டிகை வர இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் ஏராளமான மக்கள் தங்க நகைகளும் தங்க நாணயங்களும் வாங்குவார்கள் என்பதால் டிமாண்ட் அதிகரிக்கும். இந்த சூழலில் தான் ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. வெள்ளியின் விலை பொறுத்தவரை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2,65,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications