சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் குறைந்து இருக்கிறது. மே மாதத்தின் கடைசி வாரமான இந்த வாரம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,730 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 50 ரூபாய் விலை கூடி 14,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,17,840 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 400 ரூபாய் விலை உயர்ந்து 1, 18,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் 14,780 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பிறகு சனிக்கிழமை அன்று 50 ரூபாய் விலை சரிந்து 14,730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய விலைக்கே தங்கம் வந்துள்ளது. மே மாதம் முழுவதுமே தங்கத்தின் விலை ஏறுவது இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக மே 14ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 15,050 ரூபாய் என உச்சம் தொட்டது. அதன் பிறகு படிப்படியாக சரிந்து தற்போது 14, 780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ விலை 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஈரான் போர் முடிவுக்கு வராமல் இழுபறியாக நீடிப்பதே தங்கம், வெள்ளி விலை பெரிய ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் இருக்க காரணமாக உள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. ஆனால் திடீரென இரண்டு நாடுகளுமே அதில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன.
ஈரான் போர் ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயரும், ஒருவேளை மீண்டும் போர் தொடங்குகிறது என்றால் தங்கத்தின் விலை கூடும். போரும் தொடங்கவில்லை போர் முடிவுக்கும் வரவில்லை என்றால் தங்கத்தின் விலை ஒரு நாள் ஏறுவது ஒரு நாள் இறங்குவது என்ற அளவிலேயே நீடிக்கும்.
நீண்ட கால அடிப்படையில் முதலீடு நோக்கத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் விலை ஏற்ற இறக்கத்தை கண்டுகொள்ளாமல் கைவசம் பணம் இருக்கும்போது தங்கம் விலை லேசாக சரிந்திருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்து கொள்ள வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஈரான் போர் பல ஆண்டுகளுக்கு நீடிக்க போவதில்லை எனவே இப்போது முதலீடு செய்து விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நகை வாங்க வேண்டிய சூழலில் இருப்பவர்கள் இந்த விலை குறைவு வாய்ப்பை பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

