தங்கம் விலையில் 50 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இது என்ன புது டிரெண்டா இருக்கு..!!

ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கின்றன. பெரிய அளவில் விலை உயரவும் இல்லை பெரிய அளவில் விலை சரியவுமில்லை. ஒருநாள் விலை ஏறினால் அடுத்த நாள் விலை இறங்குவது என்ற அளவில் தான் நீடிக்கிறது. அந்த வகையில் சென்னையின் இன்றைய தினம் தங்கத்தின் விலை உயர்ந்ததா? அல்லது குறைந்ததா ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன என்ற விவரங்களை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 50 ரூபாய் விலை சரிவடைந்து 14,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்றைய தினம் 1,18,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 400 ரூபாய் விலை சரிவடைந்து 1,17, 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையில் 50 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இது என்ன புது டிரெண்டா இருக்கு..!!

நேற்றுடன் ஒப்பிடும்போது சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது. தங்கத்தின் விலையில் இந்த 50 என்ற எண் தான் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய மேஜிக்கை நடத்தி வருகிறது என கூறலாம்.

Also Read

ஏனெனில் சென்னையில் கடந்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14, 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று 50 ரூபாய் விலை சரிவடைந்து 14,730 ரூபாய்க்கு விற்பனை ஆனது, ஞாயிற்றுக்கிழமை விலை மாற்றம் இல்லை திங்கட்கிழமை அன்று மீண்டும் 50 ரூபாய் விலை கூடி 14, 780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்றைய தினம் 50 ரூபாய் விலை சரிவடைந்து 14,730 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. அதாவது 50 என்ற அளவிலேயே விலை உயர்வதும் விலை சரிவதுமாக இருக்கிறது.

வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended For You

ஈரான் போர் அமைதி ஒப்பந்தம் தொடர்பான இழுபறிகள் தான் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இனி வரும் நாட்களில் ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயரும், ஒருவேளை மீண்டும் போர் தொடங்குகிறது என்றால் தங்கத்தின் விலை கூடும். போரும் தொடங்கவில்லை போர் முடிவுக்கும் வரவில்லை என்றால் தங்கத்தின் விலையும் இப்படி இழுபறியாகவே தான் நீடிக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+