சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக சரிவடைந்து இருக்கிறது. ஈரான் மீது தீவிரமான தாக்குதல் நடத்துவோம் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. இந்திய சந்தையிலும் இது எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய்க்கு மேல் குறைந்து சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 140 ரூபாய் விலை சரிவடைந்து 13,810 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று 1120 ரூபாய் விலை குறைந்து 1,10,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த வாரத்தில் நான்கு நாட்கள் விலை உயர்ந்தும் இரண்டு நாட்கள் விலை சரிந்தும் காணப்பட்ட தங்கம் இந்த வாரம் விலை சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் இதே நிலைமை நீடிக்க வேண்டும் என்பதை சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 152 ரூபாய் விலை குறைந்து 15,066 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,216 ரூபாய் விலை குறைந்து 1,20,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,520 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 920 ரூபாய் விலை குறைந்து 92,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.55 லட்சத்திற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகவே வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செவ்வாய்க்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் இல்லை என்றால் இதுவரை இல்லாத தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் ஈரான் நரகத்திற்கு செல்லும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இது உலக சந்தையில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் உயர்வு கண்டிருக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. இதுதான் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறைவதற்கு காரணமாக இருக்கிறது. ஈரான் போர் தீவிரமடையும் பட்சத்தில் இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை குறையும். ஈரான் போரின் போக்கு, கச்சா எண்ணெய் விலை மாற்றம் ஆகியவை தான் தங்கம் விலையில் மாற்றத்தை கொண்டு வரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications

