திங்கள்கிழமை முதலே ஏறு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையான இன்றும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாயும் , சவரனுக்கு 400 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆபரணத்தங்கம் விலை எவ்வளவு?: நாம் நகைகளாக வாங்கக்கூடிய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரு கிராம் 9,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . நேற்றைய தினத்தை விட கிராமுக்கு 50 ரூபாய் என விலை குறைந்துள்ளது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கம் சவரனுக்கு 400 ரூபாய் வரை விலை குறைந்து 73, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்திருக்கிறது.

3 நாட்களில் எவ்வளவு குறைவு?: திங்கள் கிழமை அன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் என உயர்ந்தது, செவ்வாய்க்கிழமை என்று ஒரே அடியாக 150 ரூபாய் என விலை உயர்ந்தது, புதன்கிழமை அன்று மீண்டும் 95 ரூபாய் விலை உயர்வு கண்டது. வியாழக்கிழமை முதல் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. வியாழக்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 125 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்தது, அதேபோல வெள்ளிக்கிழமை அன்று 45 ரூபாய் என விலை சரிவு கண்டது. இன்றைய தினம் 50 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. கடந்த இந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாயும் சவரனுக்கு 1760 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரையில் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 10,000க்கும் கீழ் சென்று இருக்கிறது ஒரு கிராம் தங்கம் 9,993 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 440 ரூபாய் விலை குறைந்து என்பது 80,000 ரூபாய்க்கு கீழ் சென்று 79 ,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கிராம் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 7550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைவு கண்டு 60,400 ரூபாய் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: வெள்ளியும் இன்றைய தினம் விலை குறைவு கண்டுள்ளது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் விலை சரிந்து 126 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோல் வெள்ளி 2000 ரூபாய் விலை குறைந்து 1, 26,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்களிலும் ஏற்றம் கண்ட வெள்ளி விலை வியாழன் ,வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் தலா ஒரு ரூபாய் எனக்கு குறைந்து சனிக்கிழமையாக இன்று இரண்டு ரூபாய் குறைந்திருக்கிறது.
More From GoodReturns

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications