தைபொங்கல் தினத்தில் தங்கம் விலை ஆசிய சந்தையின் வர்த்தக துவக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் நேற்றை அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 4,615 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டதால் இன்று காலை வர்த்தகத்தில் 4600 டாலர் அளவிலேயே தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது.
புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளை நாடி வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் பொங்கல் தினத்தில் தங்கத்தை வாங்கும் வழக்கம் மக்கள் மத்தியில் இருக்கும் காரணத்தால் இன்று தங்கம் வாங்கும் மக்கள் எண்ணிக்கை நகை கடையில் அதிகரிக்கும். இதனால் இந்திய ரீடைல் சந்தையிலும் இன்று தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கும் காரணத்தால் தங்கம் விலை கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.67 சதவீதம் உயர்ந்து 1,43,201 ரூபாயாக உள்ளது. இதுவே வெள்ளி விலை 1 கிலோ 0.34 சதவீதம் உயர்ந்து 2,89,000 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் உயர்ந்து 13,290 ரூபாயாக உள்ளது, இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 1,06,320 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 310 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி விலை 3,10,000 ரூபாயாக உள்ளது.
ஈரானில் போராட்டங்களை அடக்குவதற்கு அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியுள்ளார். இதனால் ஈரானில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்கா தனது ராணுவ படைகளை மாற்றியமைத்து வருவதாகவும், ஈரான் அரசு அண்டை நாடுகளை தாக்குதலுக்கு உதவ வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
இந்த புவிசார் அச்சுறுத்தல்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு சொத்தாக மாற்றியுள்ளன. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை மற்றும் பிற ஆபத்தான சொத்துகளிலிருந்து விலகி தங்கம், வெள்ளியை நோக்கி திரும்பியுள்ளனர். இதனால் தங்க விலை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.
இன்று வெளியாகவுள்ள அமெரிக்காவின் Initial Jobless Claims தரவுகளை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர், ஏற்கனவே பணவீக்கம் குறைந்துள்ள காரணத்தால், வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தால் வட்டி குறைப்பிற்கான வாய்ப்பில் மாற்றம் ஏற்படும். இதனால் முதலீட்டு சந்தையின் கவனம் இந்த தரவுகள் மீது திரும்பியுள்ளது. இந்த தரவு அமெரிக்க பொருளாதார வலிமையை காட்டும் முக்கிய குறியீடாக இருப்பதால், இதன் அடிப்படையில் தங்கம், வெள்ளி விலை மாறுப்படும்.
தங்கம் விலை உயர்வு உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, பணவீக்க அச்சம் மற்றும் புவிசார் பதற்றங்களால் அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications