சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமா என மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று காலை ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை கூடி இருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் 800 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,13,200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

22 கேரட் தங்கம் 10 கிராம் நேற்று 1,40,500 ரூபாய்க்கு விற்பனையானது இன்று 1000 ரூபாய் விலை கூடி 1,41, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று, இன்று என 2 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 330 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. அதாவது ஒரு சவரனுக்கு 2,640 ரூபாய் விலை கூடியுள்ளது.
தங்கத்தை தொடர்ந்து இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று காலை 270 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று ஐந்து ரூபாய் விலை கூடி 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை ஏற்படும் என்ற நம்பிக்கையால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி வர தொடங்கியுள்ளனர். பதற்றம் ஓரளவு தணிந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருப்பதால் இந்திய சந்தையிலும் சில்லறை வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஈரான் போர் அமைதியை நோக்கி செல்லும் பட்சத்தில் மேலும் தங்கம் விலை உயரும் என்கின்றனர் நிபுணர்கள். இப்போது தங்கத்தில் முதலீடு செய்தால் வரும் நாட்களில் லாபம் பார்க்க முடியும் என கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

