சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்திருக்கிறது. இது சாதாரண மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது. உலகப் பொருளாதார சூழல், பல்வேறு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் , உள்நாட்டு தேவை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
4ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை: 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் இன்று வரை தங்கம் விலை குறைந்த வண்ணம் இருப்பது மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

ஆபரணத்தங்கம் விலை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 9150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் ஆபரண தங்கம் 80 ரூபாய் விலை குறைந்து 73,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கத்தை பொருத்தவரை கடந்த வாரம் வியாழக்கிழமையிலிருந்து தொடர்ந்து இறங்கு முகத்திலேயே இருந்து வருகிறது.
4 நாட்களில் எவ்வளவு குறைவு?: கடந்த வியாழக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 125 ரூபாய் விலை குறைந்து 9,255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று ஒரு கிராம் 45 ரூபாய் விலை குறைந்து 9,210 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் 50 ரூபாய் குறைந்து 9,160 ரூபாய்க்கு விற்பனையானது.
திங்கள்கிழமை அன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. இன்றைய தினம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று வரையில் இந்த ஆறு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு 230 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1840 ரூபாயும் விலை குறைந்து இருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு 11 விலை குறைந்து 9982 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 88 ரூபாய் விலை சார்ந்து 79,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் சற்றே விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 7545 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஒரு சவரன் தங்கம் 60, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 1க்கு பிறகு விலை ஏறுமா?: வெள்ளியை பொறுத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அறிவிக்க இருப்பதால் அது வரை உலக முழுவதும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்கின்றனர். இதுவே தங்கத்தின் விலை ஏறாமல் குறைந்து வருவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை போக்கை நாம் கணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications