சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்து இருக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கின்றன.
சென்னையில் சில்லறை வணிகத்தில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை நேற்று ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 200 ரூபாய் சரிந்து 14,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் 1600 ரூபாய் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,15,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னை பொறுத்தவரை இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 390 ரூபாயும் சவரனுக்கு 3000 ரூபாய்க்கு மேலும் விலைகுறைந்து இருக்கிறது. கடந்த 9ஆம் தேதியான திங்கள் கிழமை முதல் இன்று வரை சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் எப்படி மாற்றம் கண்டுள்ளது என பார்க்கலாம்.
பிப்ரவரி 9 - ரூ. 14,650
பிப்ரவரி 10 - ரூ. 14,580
பிப்ரவரி 11 - ரூ. 14,790
பிப்ரவரி 12 - ரூ. 14,600
பிப்ரவரி 13 - ரூ. 14,400
திங்கள்கிழமை முதல் இன்று வரையிலாக ஐந்து நாட்களில் இரண்டு நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது, மூன்று நாட்கள் தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 219 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 15,709 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 1,25,672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கமும் இன்று பெருமளவில் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராம் 200 ரூபாய் விலை குறைந்து 12,400 ரூபாக்கும் ஒரு சவரன் 1600 ரூபாய் விலை குறைந்து 99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை நேற்று மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்றைய தினம் குறைந்து இருக்கிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 280 ரூபாய்க்கும் கிலோவுக்கு 20,000 ரூபாய் குறைந்து 2, 80,000 ரூபாய்க்கும் விற்கப்படுடுகிறது. இந்த 5 நாட்களில் வெள்ளி விலை ஒரு நாள் சரிந்து இருக்கிறது மூன்று நாட்கள் மாற்றம் இல்லாமல் இருந்திருக்கிறது, ஒரு நாள் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே பெரிய அளவில் உயர்வு காணாமல் இருக்கிறது. இன்று இரவு அமெரிக்க பண வீக்க விகித தரவுகள் வெளியாக உள்ளன. அது எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த தரவுகளை பொறுத்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படும்.


Click it and Unblock the Notifications