தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,200 குறைவு!! வெள்ளி விலை 1 லட்சம் சரிவு..! செம டிவிஸ்ட்!!

சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று தடாலடியாக சரிந்து மக்களுக்கு இனிப்பான செய்தியை தந்துள்ளது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான 24 மணொ நேரத்தில் மட்டும் தங்கம், வெள்ளியின் விலை பல ஆயிரங்கள் சரிந்து நிம்மதியை தந்துள்ளது.

சென்னையில் ஜனவரி 26ஆம் தேதியான திங்கள் கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 275 ரூபாய் விலை உயர்ந்து 15,025 ரூபாய்க்கு விற்பனையானது. 27ஆம் தேதி அன்று 65 ரூபாய் விலை குறைந்து 14,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 28ஆம் தேதி அன்று சடாரென கிராமுக்கு 650 ரூபாய் உயர்ந்து 15,610 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29ஆம் தேதி ஒரே நாளில் கிராமுக்கு 1190 ரூபாய் உயர்வு கண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு கிராம் 16800 ரூபாய் என விற்கப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,200 குறைவு!! வெள்ளி விலை 1 லட்சம் சரிவு..! செம டிவிஸ்ட்!!

இனி தங்கத்தை கனவில் மட்டும் நினைத்து பார்க்க வேண்டியது தான் என்ற மனநிலைக்கே மக்கள் வந்துவிட்டனர். இந்த சூழலில் தான் நேற்று முதல் தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்தது. இதன்படி நேற்று மட்டும் கிராமுக்கு 950 ரூபாய் குறைந்த தங்கம் 15,850 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய தினமும் தங்கம் விலை சர்ரென குறைந்துள்ளது. கிராமுக்கு 950 ரூபாய் விலை குறைந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம்14900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,26,800 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 7600 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாய்க்கும் கீழும் ஒரு சவரன் 1,20,000க்கும் கீழும் வந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1900 ரூபாயும் ஒரு சவரனுக்கு 15,200 ரூபாயும் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இப்படி தடாலடியாக குறைந்திருப்பது சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் நாளையும் இதே விலைக்கு தான் தங்கம் விற்கப்படும். எனவே வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள், தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல சான்ஸ்.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 1036 ரூபாய் குறைந்து 16,255 ரூபாய்க்கும் ஒரு சவரன் 8,288 ரூபாய் குறைந்து 1,30,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கமும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 500 ரூபாய் குறைந்து 12,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் விலை 4000 ரூபாய் குறைந்து 1,02,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை தாறுமாறாக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு 55 ரூபாய் என வெள்ளி விலை சரிந்துள்ளது. நேற்று 405 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 55000 ரூபாய் குறைந்து 3,50,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் வெள்ளி விலை கிராமுக்கு 75 ரூபாயும் கிலோவுக்கு 75,000 ரூபாயும் சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததே இந்த விலை சரிவுக்கு காரணம். இந்த விலை குறைவை வாய்ப்பாக பயன்படுத்தி மக்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+