சென்னையில் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது . சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால் பெரிய அளவில் விலை ஏறவில்லை.
டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 96,000 ரூபாய்க்குள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து மக்களுக்கு பேரிடியை தந்துள்ளது.

சென்னையில் இன்று காலை தங்கம் தனது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது . 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவாக 200 ரூபாய் உயர்வு கண்டு 12,250து ரூபாய்க்கு விற்பனையானது . இதன் மூலம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் விலை 1600 ரூபாய் உயர்ந்து 98 ,000 ரூபாய் என்ற விலையை எட்டியது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 98 ,000 ரூபாய் என்பது வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சம்.
தங்கத்தின் விலை இப்படி அதிரடியாக உயர்ந்தது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்தது . போகிற போக்கை பார்த்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டி விடுமோ என மக்கள் அச்சமடைந்தனர். இந்த சூழலில் பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது .
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 120 ரூபாய் உயர்ந்திருக்கிறது , ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது சென்னையில் தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,370 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையாக 98, 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2560 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது .
வீடுகளில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்த வேண்டிய சூழலில் இருக்க வேண்டிய மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். 24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது . சென்னையில் தற்போதைய நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,494 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,07,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்திருக்கிறது. இன்று காலை 6 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மாலையில் கூடுதலாக ஒரு ரூபாய் விலை உயர்ந்து 216 ரூபாய்க்கும் , ஒரு கிலோ 2,16,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வரலாற்றிலேயே முதன்முறையாக வெள்ளி விலை ஒரு கிலோ 2 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது. மார்ச் மாதத்திற்கான சில்வர் ஃபியூச்சர்ஸ் ஒரு கிலோ 2,00,362 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 64.74 டாலர்லள் என்ற புதிய மைல்கல்லை எட்டியது.


Click it and Unblock the Notifications