உலகின் பெரும்பாலான பகுதிகளில் சீரான இயக்கம் இல்லை, போக்குவரத்து இல்லை, வியாபாரம் வர்த்தகம் எதுவும் இல்லை.
பங்குச் சந்தைகள் எல்லாம் இப்போது தான் ஓரளவுக்கு ஏற்றம் காணத் தொடங்குகின்றன. இந்தியாவில் இப்போது தான் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடையத் தொடங்கி இருக்கின்றன.
ஆனால் தங்கத்துக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. தன் போக்கில் விலை ஏறிக் கொண்டு இருக்கிறது.
கழுகு பார்வை
ஒட்டுமொத்தமாகவே உலகம் முழுக்க தங்கத்தின் மீதான விலை ஏற்ற நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதற்கு முழு முதல் காரணம் கொரோனா தான். சர்வதேச அளவில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது தங்கம் விலை. அதே போல இந்தியாவில் எம் சி எக்ஸ் ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்டின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. ஆனால், சென்னையில் ஆபரணத் தங்கம் இன்னும் தன் வரலாற்று உச்சத்தைத் தொடவில்லை. அதன் ஏற்றப் பாதையில் இருக்கிறது. இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கொரோனா
உலக புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ், இந்த கொரோனா வைரஸ் சிக்கல்கள் எல்லாம் ஓய்வதற்கு முன்பே தங்கத்தின் விலை ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டு விடும் எனச் சொன்னதை மறந்து இருக்கமாட்டீர்கள் என நம்புகிறோம். உலக பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிலை பெற்றாலும் இன்னும் தங்கம் விலை ஏறும் என்கிற செண்டிமெண்ட் பெரிதாக மாறவில்லை. இந்த செண்டிமெண்ட் மாறும் வரை தங்கம் விலை ஏற்றத்தை நோக்கிச் சென்று கொண்டு தான் இருக்கும் எனலாம்.
சர்வதேச தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் தங்கம், சர்வதேச சந்தையில், தன் வரலாற்று உச்சமான 1,680 டாலரைத் தாண்டி 1,696 டாலரைத் தொட்டு இருக்கிறது. சர்வதேச தங்கத்தின் விலை அதிகரித்தால், இயற்கையாகவே, இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து விடும். அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.
டாலர்
போதாக்குறைக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வேறு 76.29 ஆக இருக்கிறது. ஒரு காலத்தில் 74 ரூபாய்குக் கீழ் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 76 ரூபாய்க்கு மேல் இருப்பது, ஒட்டு மொத்தமாகவே இறக்குமதியில் இந்தியாவை பாதிக்கும். குறிப்பாக தங்கத்தின் விலையிலும் கடுமையாக எதிரொலிக்கும். எனவே சென்னையில் விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.
எம் சி எக்ஸ் ஃப்யூச்சர்ஸ்
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஜூன் 2020 மாதத்துக்கான, 24 கேரட் 10 கிராம் ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்ட் விலை, கடந்த வியாழக் கிழமை (ஏப்ரல் 09, 2020) விலை 45,302 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த ஏப்ரல் 07, 2020 அன்று உச்ச விலையாக 45,724 ரூபாயைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
விலை ஏற்றம்
இந்த 45,724 ரூபாய் என்பது சமீப காலங்களில் இல்லாத மிகப் பெரிய விலை ஏற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆகஸ்ட் 2020 மாத ஃப்யூச்சர்ஸ் காண்டிராக்டும் 45,500 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்கள் விலை ஏற்றத்தை உறுதி செய்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆபரணத் தங்கம்
மேலே சொன்ன காரணங்கள் எல்லாமே, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இன்று, சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,542 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
விலை ஏறலாம்
கொரோனா வைரஸால் தங்கம் விலை ஏறும் என்கிற செண்டிமெண்ட், சர்வதேச தங்க விலை 1,696 டாலரைத் தொட்டு இருப்பது, எம் சி எக்ஸ் சந்தையில் இந்திய தங்க ஃப்யூச்சர்களின் விலை 45,000-த்தை தொட்டு இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாய்க்கு மேலேயே இருப்பது போன்ற காரணங்களால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications