சென்னையில் தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஈரான் போருக்கு மத்தியிலும் ஒரு வாரமாக சரிவிலேயே இருந்த தங்கம் திடீரென விலை உயர தொடங்கியுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை சரிந்த தங்கம் விலை செவ்வாய், புதன் ஆகிய இந்த இரண்டு நாட்களும் விலை உயர்வு கண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய் விலை குறைந்து 14,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை 100 ரூபாய் விலை உயர்ந்து 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த சூழலின் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து 15,120 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 1,20,400 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராமுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்து 1,20,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 700 ரூபாய் விலை உயர்ந்து 1,51,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த இரண்டு நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 170 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரனுக்கு என பார்க்கும்போது 1360 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
ஈரான் போருக்கு அடுத்ததாக தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தங்கம் விலை உயர்வது இதுவே முதன்முறையாகும். அதுவும் 2 நாட்களில் கிராமுக்கு 170 ரூபாய் என உயர்ந்திருப்பதும் இதுவே முதல் முறை. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 77 ரூபாய் விலை உயர்ந்து 16,495 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் 1,31,960 ரூபாய்க்கும் 10 கிராம் 1,64,950 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்வு கண்டு 12,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 1,03,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. உலக சந்தையை பொறுத்தவரை தங்கத்தின் விலை இன்றைய தினம் சரிவடைந்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 25 டாலர்கள் குறைந்து, 5207 டாலர்களாகவும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை ஒரு டாலர் விலை குறைந்து 88 டாலராகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 1,62,615 ரூபாய் என வர்த்தகமானது. நேற்று சந்தை முடியும் போது 1,63,333 ரூபாயாக இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்திருந்தது. அதேபோல எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று வர்த்தகம் முடியும்போது 2,77,750 ரூபாயாக இருந்தது அதுவே இன்றைய தினம் 2,75,122 ரூபாய் என சரிவடைந்தது.


Click it and Unblock the Notifications