தடாலடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..? 14 வருடத்தில் முதல்முறையா ஒரு சம்பவம்..!!

இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தற்போது தங்கம் (Gold), வெள்ளி (Silver) முக்கிய உலோகமாக மாறியிருக்கும் வேளையில், பொருளாதார மந்த நிலையும், வட்டி விகித குறைப்பிற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையிலும் முதலீட்டாளர்களின் விருப்பமான அதேவேளையில் பாதுகாப்பான முதலீட்டாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் மட்டும் சும்மா சொல்ல கூடாது வெள்ளி இணையாக உயர போட்டிப்போட்டு வருகிறது. பொதுவாக சனிக்கிழமை வர்த்தகத்தில் ஏற்படும் விலை மாற்றம் வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தக சந்சையில் தாக்கம் மூலம் ஏற்படும் மாற்றம். இதேபோல் இந்த மாற்றம் திங்கட்கிழமை வர்த்தகத்திற்கான அடித்தளமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை வர்த்தக விலை மிகவும் முக்கியமானது.

Gold Rate: தடாலடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..? 14 வருட சம்பவம்..!!

அந்த வகையில் சனிக்கிழமை 1 கிராம் வெள்ளி விலை 10 ரூபாய் உயர்ந்து 355.00 ரூபாயாக உள்ளது, இதுவே 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை (Gold Rate) 70 ரூபாய் உயர்ந்து 14,620 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை அதிகரித்த காரணத்தால் தற்போது 18 கேரட் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது, இதன் விலை 55 ரூபாய் அதிகரித்து தற்போது 12,190 ரூபாயாக உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம்
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. ஜனவரி 23ஆம் தேதி வர்த்தக முடிவில் தங்கம் ஒரு ட்ராய் அவுன்ஸ் 4,988 டாலரை தொட்டு முதல் முறையாக சாதனை படைத்தது. இதன் மூலம் 5,000 டாலர் என்ற புதிய பென்ச்மார்க் அளவீட்டை நெருங்கியுள்ளது.

அதே சமயம் சாமானியர்களின் தங்கமாக இருந்த வெள்ளி தற்போது 100 டாலரை தாண்டி 39 சதவீதம் உயர்ந்து தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது.

தங்க விலை உயர்வுக்கான காரணங்கள்
அமெரிக்க டாலரின் பலவீனம் தங்க விலை உயர்வுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. அமெரிக்க டாலர் இண்டெக்ஸ் அக்டோபர் 2025-க்குப் பிறகு குறைந்த அளவை தொட்டது. டாலர் பலவீனமடையும்போது பிற நாட்டு நாணயங்களைப் பயன்படுத்தும் வாங்குபவர்களுக்கு தங்கம் மலிவாக கிடைக்கும். இதனால் தேவை அதிகரிக்கிறது. மேலும் ஜப்பானிய யென் மதிப்பில் ஏற்படும் சரிவை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசு தலையீடு செய்வதாக வதந்திகள் பரவிய காரணத்தாலும் டாலர் மதிப்பு சரிந்தது.

அமெரிக்க பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 4.4% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது வலுவாக இருந்தாலும் தங்கம் உயர்கிறது. 2026-ல் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் 42.5 பேசிஸ் பாயிண்ட் வட்டி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு தங்கம் மீதான முதலீட்டை ஈர்த்து வருகிறது.

வெள்ளியின் வேகமான ஏற்றம்
தங்கத்தை விட வெள்ளி அதிகமாக உயர்ந்து வருகிறது. 2026 தொடக்கத்திலிருந்து வெள்ளி விலை 39 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் 15 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. வெள்ளி தொழில்துறை உலோகமாகவும் இருப்பதால் சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்துவது காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியை உலோகமாக வாங்குவது அதிகரித்துள்ளது. இது உலோக இருப்பை குறைப்பது மட்டும் அல்லாமல் சப்ளை ஈடு செய்ய முடியாவிடில் டிமாண்ட் அதிகரித்து இதன் விலை இன்னும் வேகமாக உயர துவங்கும்.

தங்கம்-வெள்ளி விகிதம் எச்சரிக்கை
காலம் காலமாக முதலீட்டாளர்கள் முக்கியமாக கவனிக்கும் தங்கம்-வெள்ளி விகிதம் ஜனவரி 23 அன்று 50:1 ஆக குறைந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க 50 அவுன்ஸ் வெள்ளி போதும் என்ற நிலை வந்துள்ளது. கடந்த ஏப்ரலில் இது 105:1 ஆக இருந்தது. இது 14 ஆண்டுகளில் குறைந்த அளவு என்பதால் உலோக சந்தையில் இது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

வெள்ளி தங்கத்தை விட வலுவாக செயல்பட்டுள்ளது என்றாலும், வெள்ளி குறுகிய காலத்தில் அதிக விலை உயர்ந்துள்ளதால் சரிவு வரலாம் என்று சிலர் எச்சரிக்கின்றனர். இதேபோல் தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தொழிற்துறையில் அதிகப்படியான தேவை இருக்கும் காரணத்தால் இந்த விலை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.

பெரிய பாடம் என்ன
அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருந்தாலும் முதலீட்டாளர்கள் தங்கம் & வெள்ளியை பாதுகாப்பான சொத்துகளாக வாங்குகின்றனர். பலவீனமான டாலர், வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, உலக நாணய நிச்சயமின்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம். தங்கம் 5,000 உச்சத்தை நெருங்கியுள்ளது, வெள்ளி முதல் முறையாக மூன்று இலக்கத்தை தொட்டுள்ளது.

தங்கம் பாதுகாப்பான முதலீடு என்றாலும் விலை உயர்ந்துள்ளதால் ரிஸ்க் அதிகம். வெள்ளி பெரும் லாபம் தந்தாலும் குறுகிய கால ஏற்ற இறக்கம் இருக்கும். நீண்ட கால தேவை வலுவாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+