சென்னையில் தங்கம்(Gold) மற்றும் வெள்ளி(Silver) விலை ஜனவரி 26ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கணிசமாக உயர்ந்துள்ளன. காலை 9:55 மணி நிலவரப்படி, சர்வதேச அளவில் முதலீட்டு சந்சையில் நிலவும் அச்ச உணர்வு மற்றும் உள்நாட்டு தேவை ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றைய உயர்வு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சென்னையில் தங்க விலை நிலவரம்
சென்னை புல்லியன் சந்தையில், நகைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இது சமீப காலங்களில் ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வுகளில் ஒன்றாகும்.
இதேபோல் இன்று சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,391 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சனிக்கிழமை விலையுடன் ஒப்பிடும்போது ரூ.442 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனவபி மாதம் மட்டும் 24 கேரட் தங்கம் விலை 18.56%, 22 கேரட் தங்கம் விலை 17.14 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் தற்போது மக்கள் மத்தியில் புதிய டிமாண்ட்-ஐ உருவாக்கியுள்ள 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,500 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்த 18 கேரட் தங்கம் லைவ் வெயிட் நகைகள் மற்றும் டிசைனர் நகைகளுக்கு ஏற்றதாக இருக்கும் காரணத்தாலும், 18 கேரட் என்பதால் மக்கள் குறைந்த விலையில் வாங்க முடியும் காரணத்தால் மக்கள் அதிகப்படியான விருப்பத்தை காட்டுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் உயர்வை பதிவு செய்து வருகிறது. ஜனவரி 17ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,280 ஆக இருந்த நிலையில், ஜனவரி 26ஆம் தேதி அது ரூ.15,025 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ரூ.14,487 இருந்து ரூ.16,391 ஆக உயர்ந்து, குறுகிய காலத்தில் கணிசமான உயர்வைக் பதிவு செய்துள்ளது. சில நாட்கள் லேசான சரிவுகள் இருந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது தங்கம் விலை வேகமான உயர்வு பாதையிலேயே பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை உயர்வு
வெள்ளி விலை தங்கத்தின் போக்கை பின்பற்றி உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.375 என்ற அளவில் ரூ.10 உயர்வுடன் வர்த்தகமாகியது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.75 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது.
உள்நாட்டு காரணிகள்
உள்நாட்டில் தங்க விலை உயர்வுக்கு திருமண சீசன் நெருங்குவது முக்கிய காரணம். தென் இந்தியாவின் பல மாநிலங்களில் திருமணங்கள் சீசன் தொடங்க உள்ளதால், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் நகைக்கடைகளில் கூடுதலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் தேவை தொடர்வதால் விலை உயர்வும் நிற்காமல் உள்ளது.
மேலும், இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளது. இந்தியா தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி செய்வதால், ரூபாய் வீழ்ச்சி இறக்குமதி செலவை உயர்த்துகிறது.
சர்வதேச காரணிகள்
ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்வது, கிரீன்லாந்து தொடர்பான புவிசார் அபாயங்கள், வர்த்தக பதற்றங்கள் ஆகியவை பாதுகாப்பு சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளிக்கு தேவையை அதிகரித்துள்ளன.
திங்கள்கிழமை தங்கத்தின் ஸ்பாட் விலை 5000 டாலரை கடந்து 5,093.15 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதேபோல் வெள்ளியின் ஸ்பாட் விலையும் 109.46 டாலர் என்ற அளவுக்கு திடீரென உயர்ந்தது அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-யின் வட்டி விகித எதிர்பார்ப்புகளும் இன்றைய விலை நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஃபெட் தலைவரை அறிவிக்க உள்ளார். டவ்விஷ் அணுகுமுறை கொண்ட தலைவர் வந்தால் வட்டி விகித குறைப்புகள் அதிகரிக்கலாம்.
புவிசார் பதற்றங்களை தாண்டி ஃபெடரல் ரிசர்வ்-ன் புதிய தலைவர் நியமனம் மற்றும் வட்டி குறைப்பு தொடர்பான விஷயங்கள் தங்கம், வெள்ளி விலைகள் உயர்வுடனே வைத்திருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications