ஒரு கிலோ தங்கம் தருகிறேன் வேண்டுமா? என யாராவது கேட்டால் மாட்டேன் எனச் சொல்வார்களா..?
அவ்வளவு கூட வேண்டாம். தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைத்துக் கொடுக்கிறேன் எனச் சொல்வதை நம்பி, நம்மில் எத்தனை பேர் நகைக் கடை வாசலில் காத்துக் கிடக்கிறோம்.
அந்த அளவுக்கு தங்கம் மனித இனத்துக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சரி தங்கம் விலை நிலவரத்துக்கு போவோம்.
சென்னையில் தங்கம் விலை என்ன
நம் சிங்காரச் சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,160 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,450 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
சென்னையில் தங்கம் விலை என்ன 1
நம் சென்னையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,916. ஆக 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 39,328 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,545. ஆக ஒரு பவுன் தங்கத்தின் விலை 36,360 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்
சமீபத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில், தன் பழைய 7 ஆண்டு கால உச்ச விலையான 1,764 டாலரைத் தொட்டாலும் தொடலாம் என்கிற ரீதியில் 1,759 டாலர் வரைத் தொட்டது. ஆனால் இன்று கொஞ்சம் தங்கம் விலை கூல் டவுன் ஆகி 1,735 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்
சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1,31,185 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட தன் 52 வார உச்ச விலையான 1,34,160 ரூபாய்க்கு நெருக்கத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் சர்வதேச தங்கத்தின் விலை போன்றவைகளைப் பொறுத்து, இதன் விலையும் ஏற்றம் காணலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
தங்கம் விலை இன்று - எம்சிஎக்ஸ்
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான எம் சி எக்ஸில், ஜூன் 2020 தங்க காண்டிராக்டின் விலை 46,930 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 2020 தங்க காண்டிராக்டின் விலை 47,150 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்ன என்றால், ஆபரணத் தங்கம் (சில்லறை வணிகம்) விலையை விட, எம் சி எக்ஸில் தங்கம் விலை குறைவாகத் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
தங்கம் விலை ஏற்றம்
உலகின் முக்கியமான கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் தொடங்கி பேங்க் ஆஃப் அமெரிக்கா வரை பலரும் தங்கத்தின் விலை ஒரு நல்ல ஏற்றத்தைக் காணும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இன்று, தங்கம் விலை பெரிய ஏற்றத்தை எல்லாம் காணாமல் இருக்கிறது. இருப்பினும் ஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே இருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications