நமக்குத் தெரிந்த மிகவும் ஏழை எளிய மக்களின் வீட்டு திருமணங்களுக்குச் சென்று இருப்போம். அவ்வளவு ஏழ்மையான திருமணத்தில் கூட, குறைந்தது 5 பவுனாவது தங்க நகைகளைப் போடுவார்கள். அந்த அளவுக்கு தங்கம் நம் இந்தியர்களின் சமூக அந்தஸ்துடன் ஒன்றிணைந்து இருக்கிறது.
அப்படி தங்கம் இல்லாமல் ஒரு பெண் மறு வீட்டுக்குப் போனாலும் நிம்மதியாக வாழ்வது சிரமம் தான். அந்த அளவுக்கு சமூகத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த தங்கத்தின் விலை, நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வாருங்கள் Chennai Gold rate-ல் இருந்து தொடங்குவோம்.
சென்னையில் தங்கம் விலை 24 கேரட்
கடுமையான கொரோனா லாக் டவுன் அறிவித்து இருக்கும் சிங்காரச் சென்னயில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 49,710 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இது வரலாறு காணாத உச்ச விலை. கிராமுக்கு 4,971 ரூபாய் மேனிக்கு, பவுனுக்கு 39,768 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, நேற்று 45,580 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இதுவும் வரலாறு காணாத முரட்டு விலை ஏற்றம். ஆக கிராமுக்கு 4,558 ரூபாய் மேனிக்கு, பவுனுக்கு 36,464 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போதே, மனதில் ஒரு இனம் புரியாத பயம் வந்துவிடுகிறது.
ஒரே மாதத்தில் 1,620 ரூபாய் விலை ஏற்றம்
கடந்த மே 28, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,090 ரூபாய்க்கு விற்றார்கள். ஆனால், நேற்றோ அதே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 49,710 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆக இந்த ஒரு மாத காலத்துக்குள் தங்கம் விலை 1,620 ரூபாய் அதிகரித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாமானியர்கள் தொட முடியுமா
2019 - 20 நிதி ஆண்டில், இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையே 7 கோடி பேருக்குள் தான் இருப்பதாக இந்திய வருமான வரித் துறையினரின் வலைதளம் சொல்கிறது. ஆக இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் 7 கோடி பேருக்குள் தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் மற்ற 120 கோடிக்கும் மேற்பட்ட சாமானியர்கள் 50,000 ரூபாயைக் கொடுத்து 24 கேரட் 10 கிராம் தங்கத்தை வாங்க முடியுமா..? என்பதை நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள்.
சர்வதேச தங்கம் விலை ஏற்றம்
கடந்த ஒரு வார காலமாக, 1,720 - 1,730 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டிருந்த, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,745 டாலரைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. இப்படி தடாலடியாக சர்வதேச தங்கம் விலை, கிட்டத்தட்ட, கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு 1,745 டாலரைத் தொட்டது, இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது.
எம் சி எக்ஸ்-ல் எதிரொலி
இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சிலும் இதே போல விலை அதிகரித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை, 18 மே 2020 அன்று 48,190-ஐத் தொட்டு வர்த்தகமானது. அதற்குப் பின் நேற்று தான் 47,980 ரூபாய்க்கு விலை ஏற்றம் கண்டு இருக்கிறது. ஆக தங்கம் விலை அதிகரிப்பது சர்வதேச சந்தையிலும், எம் சி எக்ஸிலும் உறுதியாகி இருக்கிறது.
ஏன் இந்த விலை ஏற்றம்
இந்தியா சீனா போர் பதற்றம், அமெரிக்கா சீனா குழாய் அடிச் சண்டைகள், தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76.19 ரூபாயிலேயே வர்த்தகமானது என பல காரணங்களால் தங்கம் விலை பங்கமாக ஏறிக் கொண்டே இருக்கிறது. இன்னும் 300 ரூபாய் தான், 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 50,000 ரூபாயைத் தொட்டு விடும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications