சென்னையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது அதே வேளையில் வெள்ளி விலை சரிந்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை லேசாக உயர்வு கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று 30 ரூபாய் விலை உயர்ந்து 14,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,12,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,40,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொருத்தவரை தங்கம் விலை கடந்த வாரம் முதலே விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.

ஈரான் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு அல்லது வட்டி உயர்வு முடிவை எடுக்காமல் வட்டியை அப்படி நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புள்ளது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 32 ரூபாய் விலை உயர்ந்து 15,338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,53,380 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,770 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94 ,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. 5 ரூபாய் விலை குறைந்து வெள்ளி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்தன. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விட தொடங்கினர்.’
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
