சென்னை: வழக்கமாக ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளையும் உயர்ந்து வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்றைய தினம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் காலை, மாலை என இரண்டு வேளையும் சரிவை சந்தித்து இருக்கிறது. சென்னையில் இன்று காலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து மக்களுக்கு நிவாரணம் அளித்த நிலையில் மாலையும் விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய் என உச்சபட்ச விலையை எட்டியது. இன்று காலை கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து 16,200 ரூபாய் என விற்பனையானது. ஒரு சவரனுக்கு 4800 ரூபாய் குறைந்து 1,29,600 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே மாலை வேளையில் மீண்டும் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

இன்று காலை 16,200 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரண தங்கம் மாலையில் 15,850 ரூபாய் என கிராமுக்கு 350 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 1,26,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது இன்றைய நாளில் மட்டும் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 950 ரூபாயும் ஒரு சவரனுக்கு 7,600 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது.
அடுத்ததாக வெள்ளி விலையும் ஒரே நாளில் இரண்டு முறை சரிந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில் இன்று காலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து கிராமுக்கு 415 ரூபாயாக இருந்தது. அதுவே தற்போது மீண்டும் ஒரு பத்து ரூபாய்க்கு குறைந்து 405 ரூபாய் என விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 7600 ரூபாயும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20000 ரூபாயும் குறைந்திருக்கிறது. சர்வதேச சந்தையிலும் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்தது தான் இந்த விலை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகும். உலக சந்தையில் முதலீட்டாளர்கள் பெருமளவில் லாபத்தை பதிவு செய்துள்ளனர். இது விலை சரிவுக்கு வித்திட்டுள்ளது.
இந்த விலை குறைவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரே நாளில் 1037 ரூபாய் சரிந்து கிராம் 17,291 ரூபாய்க்கும் சவரன் 8296 ரூபாய் குறைந்து 1,38,328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு 600 ரூபாய் சரிந்து 13,300 ரூபாய்க்கும் சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த நாட்டுக்கும் மிரட்டல் விடுக்காமல் புதிதாக வர்த்தக மோதல்களை தொடங்காமல், புவி சார் பதட்டங்களையும் உருவாக்காமல் இருக்கும் பட்சத்தில் தங்கம் , வெள்ளி விலை குறைவு நீடிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications