சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. நேற்று குறைந்த தங்கம் இன்று உயர்வு கண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பேச்சுவார்த்தை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 60 ரூபாய் உயர்வு கண்டு 14,810 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் இன்று 1,18,480 ரூபாயாக உயர்வு கண்டுள்ளது. அதுவே நேற்ற்உ 1,18,000 ரூபாய் என இருந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாயும், ஒரு சவரன் தங்கம் 480 ரூபாயும் விலை உயர்ந்துள்ளன.

அடுத்ததாக 24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு 76 ரூபாய் விலை உயர்ந்த், 16,167 ரூபாய்க்கும், 10 கிராம் தூய தங்கம் 1,61,670 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 18 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமிற்கு 90 ரூபாய் விலை உயர்ந்து குறைந்து 12,425 ரூபாய்க்கும் ஒரு சவரன் 99,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இறுதியாக வெள்ளியின் விலை நிலவரத்தைப் பார்க்கையில், இன்று சென்னையில் வெள்ளி விலை கிலோவிற்கு 5000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஈரான் போர் தொடர்பான தகவல்களே தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இனி வரும் நாட்களில் தங்கம் விலை இதே போல சற்றே ஏறுவது இறங்குவதுமாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். விலை குறைவை வாய்ப்பாக பயன்படுத்தி மக்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.
கோவையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 60 ரூபாய் உயர்வு கண்டு 14,810 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று 1,18,480 ரூபாயாக உயர்வு கண்டுள்ளது. அதே போல மதுரை, திருச்சி என தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இதே விலை காணப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

