ஈரான் போர் காரணமாக தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போக்கில் செல்கிறது. போர் தீவிரமடைந்தால் தங்கம் விலை சரிகிறது, அமைதி பேச்சுவார்த்தை என தலைவர்கள் பேசினால் விலை கூடுகிறது.
சென்னையில் மார்ச் மாதம் முழுவதுமே தங்கம் விலை சரிவிலேயே தான். மார்ச் 1ஆம் தேதி ஆபரணத் தங்கம் 1, 24,000 ரூபாய் என்று அளவில் இருந்தது. அதுவே படிப்படியாக குறைந்து 1,04,000 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்தது. இந்நிலையில் இந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. சென்னையில் திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரையிலான ஆறு வர்த்தக நாட்களில் தங்கத்தின் விலை நான்கு நாட்கள் உயர்ந்துள்ளது இரண்டு நாட்கள் விலை குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் திங்கட்கிழமை அன்று ஒரு கிராமுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்து 13,770 ரூபாய்க்கு விற்பனையானது இதுவே செவ்வாய்க்கிழமை அன்று 100 ரூபாய் விலை குறைந்து 13,670 ரூபாய் என சரிவடைந்தது. புதன்கிழமை அன்று தடாலடியாக ஒரு கிராமுக்கு 380 ரூபாய் என தங்கம் விலை உயர்வு கண்டு 14,050 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே வியாழன் அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 300 ரூபாய் சரிவடைந்து 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 13,850 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்த 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,11,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் விலை கூடியுள்ளது. இந்த வாரத்தில் விலை நிலவரத்தை பார்த்தால் 100 என்ற நம்பரை அடிப்படையாக கொண்டு தான் விலை ஏற்றமும் இறக்கமும் இருந்துள்ளது.
வெள்ளியின் விலை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஈரான் மீது தீவிர தாக்குதல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். ஈரான் தரப்பும் சமாதானத்திற்கு வருவதற்கான எந்த ஒரு அறிகுறியும் காட்டவில்லை.
தொடர்ந்து ஈரானும் தாக்குதலை தீவிர படுத்திய வண்ணமே இருக்கிறது. எனவே இனிவரும் வாரங்களில் ஈரான் போர் எந்த போக்கினை நோக்கி செல்ல போகிறது, கச்சா எண்ணெய் விலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பொறுத்துதான் தங்கத்தின் விலையில் மாற்றத்தை பார்க்க முடியும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சரிவடையும்.
தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்னும் விலை குறையட்டும் வாங்கிக் கொள்ளலாம் என காத்திருக்காமல் இந்த வாய்ப்பை ஒரு சிறந்த வாய்ப்பாக கருதி வாங்கி வைத்துக் கொள்வது தான் நல்லது. ஏனெனில் சர்வதேச அளவில் நிகழக்கூடிய சின்ன சின்ன மாற்றங்களும் தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கங்களை கொண்டு வரும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications