இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆளில்லா உணவகத்தை திறந்துள்ளது. பார்சல் முறையில் மட்டுமே வழங்கப்படும் இந்த உணவகம் சென்னை கொளத்தூரில் திறக்கப்பட்டு இருக்கிறது.
பாய் வீட்டு கல்யாணம் அல்லது தி பிவிகே பிரியாணி என அழைக்கப்படும் இந்த நிறுவனம், பாரம்பரிய முறைப்படி கல்யாண பந்தி அமைப்பில் பிரியாணி வழங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் பிரியாணி அடுப்புக்கரி மற்றும் விறகு அடுப்பு மூலம் சமைக்கப்படுகிறது.
இந்த கடையில் என்ன ஸ்பெஷல்..?! வாங்க பார்ப்போம்..
தி பிவிகே பிரியாணி
தி பிவிகே பிரியாணி என அழைக்கப்படும் இந்த நிறுவனம், சென்னையில் திறக்கப்பட்டுள்ள கடை, பாப்-அப் (pop shop) போன்ற கடையில் 32 இன்ச் ஸ்கிரீன்-கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர் தங்களுக்கு வேண்டிய உணவு விவரங்களை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை கியூஆர் கோட் ஸ்கேன் செய்தோ அல்லது கார்டுகளை மூலமாகவே செலுத்தலாம். இந்த கடை எப்படி இயங்குகிறது என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்ஸ்டா வீடியோ
வைரலாகி வரும் வீடியோவில், வாடிக்கையாளர் எப்படி இந்த கடையில் உணவை வாங்குகிறார் என்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் அந்த நபர் டிஜிட்டல் மெனுவில் உள்ள உணவு வகைகளை பிரவுஸ் செய்து பின் ஆர்டர் செய்கிறார். இறுதியில் தனது ஆர்டருக்கான பணத்தை செலுத்தியதும் உணவு தயாராகி பெட்டியின் கீழ் வந்து விடுகிறது. பின் அவர் தனது உணவை அதற்கான கதவை திறந்து எடுத்துக் கொள்கிறார்.
ஆளில்லா கடை
வீடியோவின் படி இந்த ஆளில்லா கடையில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமோ, வேறு யாருடனோ பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கான உணவை நான் நான்கே நிமிடங்களில் எடுத்துக் கொண்டேன் என வீடியோவை வெளியிட்ட நபர் தெரிவித்து இருக்கிறார்.
பிவிகே ஸ்டார்ட்அப்
பாய் வீட்டு கல்யாண பிரியாணி 2020 வாக்கில் துவங்கப்பட்டது. "நாங்கள் இறைச்சி, காய்கறிகள் மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றை பயன்படுத்தி, பிரியாணி சுவை எப்படி முறைப்படி செய்ய வேண்டுமோ அதன் படியே பிரியாணி செய்து சுவை குறையாமல் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது" என பிவிகே ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
பிற உணவுகள்
பிரியாணி மட்டுமின்றி இந்த கடையில் மட்டன் பாயா, இடியாப்பம், பரோட்டா மற்றும் அல்வா போன்ற இதர உணவு வகைகளும் கிடைக்கின்றன. பிவிகே பிரியாணியின் விலை ரூ. 220-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 449 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் சென்னை முழுக்க 60 நிமிடங்களில் டெலிவரி செய்வதாக உறுதியளிக்கிறது.
கொளத்தூர்
தற்போது கொளத்தூரில் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதே போன்ற கடைகளை சென்னை முழுக்க மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிவிகே ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஃபஹீம் எஸ் தெரிவித்து இருக்கிறார்.
பெங்களூர்
பிவிகே மட்டுமின்றி, மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இதே போன்ற ஆட்டோமேடட் உணவு சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்அப் ஃபிரெஷ்அப் ரோபோடிக்ஸ் நிறுவனம் தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆட்டோமேடட் உணவு சேவை
இந்த ஃபுட்பாட் (foodbot) சமையல் செய்து வினியோகம் செய்யும் முதல் தானியங்கி இயந்திரம் இது என, இதனை கண்டறிந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். இவர்கள் தோசாபாட், ரைஸ்பாட் மற்றும் ஜூஸ்பாட் உள்ளிட்டவைகளை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்து உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications