யாருக்கும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாது. சமூக ஊடக தளங்களில் பாலோயர்ஸ் பெற பல இளைஞர்கள் கடுமையாக முயற்சி செய்கின்றனர் ஆனால் சிலர் ஒரே இரவில் பிரபலமாகி லட்சக்கணக்கான பாலோயர்ஸை பெற்று வருகின்றனர். அப்படி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சில நாட்களிலேயே 5 லட்சம் பாலோயர்ஸை பெற்றுள்ளார் 81 வயதான சென்னையை சேர்ந்த மெர்லின் பாட்டி. அதேசமயம் அவரது கதையை கேட்டால் கல் நெஞ்சும் கரைந்து விடும்.
மியான்மரை சேர்ந்த மெர்லின் பல தசாப்தங்கள் முன்பு இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்து சென்னையில் செட்டிலானார். இந்தியாவில் சந்தோஷமான வாழ்க்கை வாழ போகிறோம் என்று கனவுகளுடன் வந்த மெர்லினுக்கு ஆரம்பத்தில் வாழ்க்கை இன்பமயமாக தான் கழிந்தது.

ஆனால் அதன் பிறகு அவரது வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக புயல் வீசியது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக காலமாகினர். இதனால் மெர்லினுக்கு உறவினர்கள் இல்லாமல் போனார்கள். மேலும் ஒரு கட்டத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக சென்னை தெருக்களில் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வீடியோ கிரியேட்டரான முகமது ஆஷிக் என்பவர் தற்செயலாக 81 வயதான மெர்லின் பாட்டியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு தனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை மெர்லின் பாட்டி உணர்ந்திருக்க மாட்டார். ஆஷிக் முகமது-ன் டியூஷன் டீச்சர் தான் மெர்லின் பாட்டி, அவர் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் எவ்விதமான தயக்கமுமின்றி பேசினார்.
அப்போது முகமது ஆஷிக்கிடம் தனது கஷ்டத்தை மெர்லின் பாட்டி தெரிவித்தார். பலரிடம் உணவுக்காக நான் கெஞ்சுகிறேன், சில நேரங்களில் நான் பிச்சை பெறுகிறேன், சில நேரங்களில் கிடைக்காது அப்போது நான் பட்டினி கிடக்க வேண்டும் என்று மெர்லின் பாட்டி தெரிவித்தார்.
மேலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய தகவலையும் முகமது ஆஷிக்கிடம் மெர்லின் பாட்டி தெரிவித்தார். முகமது ஆஷிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெர்லின் பாட்டியுடன் கலந்துரையாடிய வீடியோவை பகிர்ந்தார்.
அந்த வீடியோ ஒரே நாள் இரவில் வைரலானது. இதனையடுத்து மெர்லின் பாட்டிக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முகமது ஆஷிக் இன்ஸ்டாகிராமில் மெர்லினுக்காக இங்கிலிஷ் வித் மெர்லின் என்ற கணக்கை தொடங்கினார். நான்கே நாட்களில் இன்ஸ்டாகிராமில் மெர்லினை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.
தற்போது உலகம் முழுவதில் இருந்தும் பலர் மெர்லின் பாட்டிக்கு உதவி செய்து வருகின்றனர். மெர்லின் பாட்டி தற்போது ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவர் மரியாதைக்குரிய மற்றும் கண்ணியமான வாழ்க்கையை நடத்த முடியும். மேலும், மெர்லின் ஆங்கிலம் கற்றல் தொடர்பான வீடியோக்களை உருவாக்க உள்ளார். அதனை வெளியிட்டு, அதற்காக மெர்லின் பாட்டிக்கு பணம் கொடுக்க உள்ளதாக முகமது ஆஷிக் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications