சென்னையில் முதல் 24 மணி நேர நடைபாதை வளாகம்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

சென்னை மாநகரில் இரவு நேர பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், காதர் நவாஸ் கான் சாலையில் அமையவிருக்கும் புதிய 24 மணி நேர நடைபாதை வளாகம், நகரத்தின் சமூக மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 20,000 வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில், ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதும் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, முற்றிலும் பாதசாரிகளுக்கான மண்டலமாக மாற்றப்படவுள்ளது.

சர்வதேச தரத்தில் வடிவமைப்பு : இந்த நடைபாதை வளாகம் சர்வதேச தரத்திலான வடிவமைப்புடன் உருவாக்கப்படவுள்ளது. இது, நகர மக்களுக்கு ஒரு பொதுவான ஓய்வு மற்றும் சமூகக் கூடமாக செயல்படும்.

சென்னையில் முதல் 24 மணி நேர நடைபாதை வளாகம்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

அடிப்படை வசதிகள் : இங்கு பொதுமக்கள் அமர்ந்து பேசுவதற்கான நவீன இருக்கைகள், பல்வேறு உணவு வகைகளை விற்கும் தெரு உணவுக் கடைகளுக்கான பிரத்யேக இடங்கள், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்கான பகுதிகள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உதவும் திறந்தவெளி அரங்கம் ஆகியவை இடம்பெறும்.

சுற்றுச்சூழல் கவனம் : வடிவமைப்பு குழுவில் உள்ள வல்லுநர்கள், அப்பகுதியின் கலாச்சார மதிப்புகளை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்பை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, அதிகளவிலான மரங்களை நட்டு, நிழலை உருவாக்கவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது. மேலும், நடைபாதை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தடுப்புகள், நவீன LED விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படும்.

இரவிலும் விழித்திருக்கும் வணிகம் : இந்த 24 மணி நேர வளாகம் செயல்பாட்டுக்கு வரும்போது, காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு முழுவதும் செயல்பட வாய்ப்பு ஏற்படும். இது, பல்வேறு சிறு குறு வணிகர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சென்னையின் இரவு நேரப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "இது வெறும் நடைபாதை மட்டுமல்ல, நகரத்தின் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு பொது வெளி. நகர மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வெற்றிக்குப் பிறகு, இதுபோல மேலும் பல நடைபாதை வளாகங்களை நகரத்தின் பிற முக்கிய பகுதிகளிலும் விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சவால்கள் என்ன..?: இந்த சாலையில் போக்குவரத்துத் திசைமாற்றம் செய்வது மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான சிக்கல்களை சமாளிக்க வேண்டியுள்ளது. அப்பகுதி வணிகர்கள் மற்றும் குடியிருப்போருடன் இணைந்து, சரக்கு ஏற்றி இறக்கும் நேரங்களை முறைப்படுத்துவது போன்ற சுமூகமான தீர்வுகளை காண மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பணிபுரிவோர், இரவு நேரத்திலும் புத்துணர்ச்சியடைய ஒரு பாதுகாப்பான, அழகான இடம் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, இது ஒரு சமூகக் கூடலாகவும், கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாகவும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்திற்குள் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+