கடந்த ஜூன் மாதத்தில், வீட்டில் சமைக்கப்பட்ட சைவ தாலியின் ஒரு பிளேட் (veg meals) விலை அதிகரித்தும், அசைவ தாலியின் (non-veg meals) விலை குறைந்தும் உள்ளது என்று CRISIL-இன் ரொட்டி ரைஸ் ரேட் அறிக்கை கூறுகிறது. கோழி கறியின் விலை குறைந்ததாலும், தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்ததாலும், கடந்த மாதத்தில் நீங்கள் அசைவ சாப்பாட்டுக்கு குறைவாக செலவிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தயாரிக்கப்படும் தாலியின் சராசரி செலவு, இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து பெறப்படும் பொருட்களின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. தானியங்கள், பருப்பு வகைகள், கோழி கறி, காய்கறிகள், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்கள் தாலியின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

CRISIL நிறுவனத்தின் MI&A ஆராய்ச்சி மதிப்பீடுகளின்படி, ஜூன் மாதத்தில் வீட்டில் சமைக்கும் மாமிச தாலியின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் சைவ தாலியின் விலை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் விலையை ஒப்பிடும் போது, கோழி கறியின் விலையில் சுமார் 14 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிகரித்த கோழி வளர்ப்பு மற்றும் குறைந்த தீவன செலவு காரணமாக அசைவ தாலியின் விலை குறைந்துள்ளது.
ஆனால் வீட்டில் சமைக்கப்படும் சைவ தாலியின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை 30 சதவீதம், வெங்காயம் விலை 46 சதவீதம் மற்றும் உருளைக்கிழங்கு விலை 59 சதவீதம் கடந்த ஆண்டை விட உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம்.
குறிப்பாக, ராபி பயிர்களின் வரத்து குறைந்ததால் ஆன்லைன் விற்பனைக்கு காய்கறிகள் குறைவாக கிடைப்பதும், மார்ச் மாதத்தின் மழை காரணமாக உருளைக்கிழங்கு மகசூல் குறைந்ததும், கர்நாடக மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய முக்கிய உற்பத்தி பகுதிகளில் அதிக வெப்பநிலை காரணமாக தக்காளியில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு தக்காளி விளைச்சல் குறைந்ததும் இதற்கு முக்கிய காரணங்கள் என்று CRISIL அறிக்கை தெரிவிக்கிறது.
மாத அடிப்படையில், வெஜ் தாலியின் ஒரு பிளேட் விலை 6 சதவீதமும், அசைவ தாலியின் ஒரு பிளேட் விலை 4 சதவீதமும் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு விலை 9 சதவீதமும், வெங்காயம் விலை 15 சதவீதமும், தக்காளியின் விலை 29 சதவீதமும் அதிகரித்து, வரத்து குறைந்ததால், சைவ தாலியின் விலை உயர்ந்துள்ளது. மே மாதத்தில், அசைவ தாலியின் விலை 7 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் வெஜ் தாலியின் விலை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இனி வரும் நாட்களில் தக்காளி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகள் போன்ற சைவ தாலிக்கு தேவைப்படும் பொருட்களின் விலை குறைந்தால், அவற்றின் ஒரு பிளேட் விலையும் குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications