தங்கம் விலை ஏற்கனவே விண்ணை முட்டிய நிலையில் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் டிராகன் தேசமான சீனா களத்தில் இறங்கியுள்ளது. சீனா, இந்தியா மட்டும் அல்லாமல் எந்தொரு நாட்டிலும் மக்கள் பணத்தைக் கையாளும் நிறுவனங்கள் புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அரசின் ஒப்புதல் அவசியம் .
உதாரணமாக இந்தியாவில் எல்ஐசி நிறுவனமும், ஓய்வூதிய நிறுவனமும் தங்களிடம் இருக்கும் பண இருப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஒரு சிறிய அளவுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்றாலோ, இதேபோல் புதிய முதலீட்டு பிரிவில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அரசின் அனுமதி அவசியம். இப்படி அனுமதி கொடுத்தால் பெரும் தொகை சந்தைக்கு வரும். இப்படியொரு விஷயம் தான் சீனாவின் நடந்துள்ளது.

சீனாவின் காப்பீட்டு நிறுவனங்கள் தங்க சந்தையில் நுழைந்துள்ளதால், தங்க முதலீடு சந்தையின் போக்கும், தங்கத்தின் விலையும் புதிய மாற்றத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஷாங்காய் தங்க எக்ஸ்சேஞ்ச் சமீபத்தில் நான்கு முக்கிய சீன ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உறுப்பினராக அனுமதி அளித்துள்ளது.
இதனால், இந்த நிறுவனங்கள் தங்கத்தை தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்க முடியும். இது சீன முதலீட்டின் முக்கியமான மாற்றத்தையும், புதிய பாதையையும் காட்டுகிறது. இது சீனாவில் தங்க வாங்குபவர்களின் நெட்வொர்க்-ஐ விரிவுபடுத்தி, சர்வதேச சந்தையில் இருந்து தங்க கொள்முதலை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இந்த நான்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 13 டிரில்லியன் யுவான் ஆகும். தற்போது கிடைத்துள்ள அனுமதி மூலம் சீனாவின் மொத்த கொள்முதலில் இந்த 4 நிறுவனங்கள் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு ஆதிக்கத்தைப் பெறும்.
இந்த 4 நிறுவனங்களும் தங்களுடைய மொத்த சொத்து மதிப்பில் 1% தங்கத்தில் முதலீடு செய்தால், சுமார் 17.8 பில்லியன் டாலர் தொகைக்குத் தங்கத்தை வாங்க முடியும். இது சுமார் 183 டன் அல்லது 5.9 மில்லியன் ட்ராய் அவுன்ஸ் தங்கத்திற்குச் சமம். தங்க சந்தையில் இத்தகைய பெரும் முதலீடு வந்தால் தங்கம் விலையை நினைத்துப் பாருங்கள், அடுத்த சில வாரத்தில் தங்கம் விலை 1 லட்சத்தை அசால்ட்டாக தொடும். ஆனால் இந்த 4 நிறுவனங்களும் இன்னும் தங்கத்தை வாங்கத் துவங்கவில்லை.
183 டன் தங்க கொள்முதல் என்பது, கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய மத்திய வங்கிகள் அதாவது ரிசர்வ் வங்கிகள் வாங்கிய தங்கத்தின் 50 சதவீதத்திற்கு சமம். இந்த 4 சீன ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய பணத்தை உடனடியாகவும், மொத்தமாகுவும் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசரம் இல்லை, இதேபோல் எவ்விதமான நிர்பந்தமும் இல்லை.
ஆனால் ஷாங்காய் தங்க எக்ஸ்சேஞ்ச் நான்கு முக்கிய சீன ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உறுப்பினராக அனுமதி அளித்த முதல் வர்த்தக நாளிலேயே தங்கத்தை வாங்கத் துவங்கியது. இதில் இருந்தே சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை புரிந்துகொள்ள முடியும். இதனால், தங்க சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications