சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் எப்போதும் இல்லாத வகையில் சுமார் $2,410 ஐ தொட்டு வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணி எது தெரியுமா? உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளரும் நுகர்வோர் நாடாக இருக்கும் சீனா!

தங்கம் விலை பொதுவாகச் சர்வதேசச் சந்தையில் நிலவும் டிமாண்ட், வர்த்தகம், டாலர் மதிப்பில் ஆகியவற்றின் கலவையில் தான் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதோ குறைவதோ நிகழ்கிறது.
இதேவேளையில், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம், இஸ்ரேல் - ஈரான் மத்தியில் போர் பதற்றம் மூலம் மத்திய கிழக்கு நாடுகளைப் பாதிக்கும் சூழ்நிலை ஆகியவை தங்கம் விலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும். இதில் சீனா எப்படி காரணமாகிறது..?
தங்கத்தின் மீதான ஈர்ப்பு: பொதுவாக, உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்குபவர்களைக் கொண்ட நாடு என்ற பட்டத்தை இந்தியாவும் சீனாவும் மாறி மாறி பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
சீனாவில் தங்க நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களின் தேவை வரலாற்று உச்ச அளவை தொட்டு உள்ளது. இதன் காரணமாக, உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்குபவர் என்ற பட்டத்தைச் சீனா கைப்பற்றியது.
தங்கம் விலை தடாலடி உயர்வுக்கு பின்பும், சீனாவில் தங்க நகைகளுக்கான தேவை 10% அதிகரித்த நிலையில், இந்தியாவில் 6% குறைந்தது. இதேபோல், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களில் முதலீடு செய்வது சீனாவில் 28% உயர்ந்தது.
இதற்கு முக்கியமான காரணம் சீனாவின் பங்குச்சந்தையும் சரி, ரியல் எஸ்டேட்-ம் சரி மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாத நிலை இருக்கும் காரணத்தால் இளம் தலைமுறையினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இறக்குமதி அதிகரிப்பு: உலகிலேயே அதிக தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடு சீனா என்றாலும், தேவையைப் பூர்த்தி செய்ய அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்த இறக்குமதி அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக 2,800 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது உலகளவில் பங்குச் சந்தை வர்த்தக சந்தைகளில் (exchange-traded funds) இருக்கும் மொத்த தங்கத்தை விட அதிகமாகும். அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வைத்திருக்கும் தங்கக் கையிருப்பின் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாகும்.
வேகமெடுக்கும் இறக்குமதி: சமீப காலங்களில் தங்கத்தின் இறக்குமதி வேகம் மேலும் அதிகரித்துள்ளது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு (Lunar New Year) அதிகரித்த இறக்குமதி மற்றும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2023 ம் ஆண்டை விட 34% அதிகரித்துள்ள இறக்குமதி போன்றவை இதற்குச் சான்றுகள்.
மத்திய வங்கியின் தங்க கையிருப்பு: சீன மத்திய வங்கியான பீபுள்ஸ் பேங்க் ஆஃப் சீனா (The People's Bank of China) கடந்த 17 மாதங்களாகத் தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறது. இது அவர்களது நீண்ட கால தங்கம் வாங்கும் திட்டமாகும். இதன் மூலம் அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைத்து, தங்கள் நாணய மதிப்பு குறைவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.
ஷங்காய் பிரீமியம் (Shanghai Premium): உலக தங்க விலை சாதனை அளவு உயர்ந்திருந்தாலும், சீன யுவான் மதிப்பு குறைந்திருந்தாலும், சீனாவில் தங்கத்தின் மீதான கவர்ச்சி குறையவில்லை என்பதற்குச் சான்று, "ஷங்காய் பிரீமியம்".
சீன மக்கள் மத்தியில் இருக்கும் தங்கத்திற்கான டிமாண்ட் சாதகமாகப் பயன்படுத்தி சீனாவில் தங்கம் வாங்குபவர்கள் பெரும்பாலும் சர்வதேச விலையை விட பிரீமியம் தொகை இந்த மாத தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் $89 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு சராசரி $35 மற்றும் வரலாற்றுச் சராசரி வெறும் $7 மட்டுமே.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?



Click it and Unblock the Notifications