சீனாவுக்கு அடித்த தங்க ஜாக்பாட்!! 15 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ??

உலகளவில் எந்த நாட்டிடம் அதிகமாக தங்கம் கையிருப்பு இருக்கிறதோ அந்த நாட்டின் கை தான் இனி ஓங்கப்போகிறது என்ற ஒரு நிலையை நோக்கி உலகமே நகர்ந்து கொண்டிருக்கிறது . உலக அளவில் 2025 ஆம் ஆண்டில் பெருமளவில் தங்கம் விலை உயர்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம்.

பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த ஆண்டில் போட்டி போட்டுக் கொண்டு அதிகமாக தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருக்கின்றன. குறிப்பாக சீனா மிகத் தீவரமாக தங்கத்தை வாங்கி வைக்கிறது. சீன நாட்டு வங்கி மட்டுமல்ல தங்களுடைய மக்களும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என சீன அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. எதிர்காலம் தங்கமாக தான் இருக்கப்போகிறது , தங்கம் யார் வசம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தான் உலக அரசியலில் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்ற ஒரு சூழலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு வருகிறது.

சீனாவுக்கு அடித்த தங்க ஜாக்பாட்!! 15 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!! இனி தங்கம் விலை என்ன ஆகுமோ??

டாலரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் சீனா போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கி சேமித்து கொள்கிறது . இந்த சூழலில் சீன அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. சுமார் 1444 டன்கள் அளவிலான தங்கம் இருப்பை சீன அரசாங்கம் கண்டுபிடித்து இருக்கிறது. சீனா அரசாங்கத்தின் அறிவிப்பின்படி கடந்த 1949 ஆம் ஆண்டுக்கு பிறகு சீனாவில் முதன்முறையாக பல்லாயிரம் டன்கள் அளவிலான தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

சீனாவின் லியானிங் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பூமிக்கு அடியில் சுமார் 1444 டன்கள் தங்கம் இருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . தற்போதைய விலை நிலவரத்தின்படி பார்க்கும்போது இந்த தங்கத்தின் மதிப்பு 166 பில்லியன் யூரோக்கள் என்ன சொல்லப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு யூரோ என்பது 103 ரூபாய் அப்படி என்றால் 166 பில்லியன் யூரோக்களின் மதிப்பு என்பது 17,121,125,460,000 ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 15 மாதங்களாக லியானிங் பகுதியில் 1000க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களையும் தொழிலாளர்களையும் கொண்டு சீனா பூமிக்கு அடியில் இருக்கும் தங்கம் குறித்து தீவிரமான ஆய்வை நடத்தியது. அதில் தான் இந்த 1444 டன்கள் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவை பொருத்தவரை தீவிரமாக தங்கள் நாட்டில் எங்கெல்லாம் தங்கும் கையிருப்பு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் ஹுனான் மாகாணத்தில் 1000 டன்கள் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தது. அதேபோல காஞ்சு பகுதியில் 40 டன்கள் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தது. உலகிலேயே அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருக்கிறது. அந்த வகையில் இந்த தங்கம் கண்டுபிடிப்பு அந்த நாட்டின் தங்க இறக்குமதி சார்பை குறைக்கும். இந்தியாவும் இதே போல தீவிரமாக தங்க இருப்புகளை ஆய்வு செய்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+