இந்திய ரீடைல் சந்தையில் பெரும்பாலான நுகர்வோர் விற்பனை பிரிவுகளில் நுழைந்துள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல், பேஷன் துறையின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனாவின் பேஷன் பிராண்டான SHEIN உடன் புதிய கூட்டணி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா மத்தியிலான எல்லை பிரச்சனைக்கு பின்பு சீன வர்த்தகங்கள் மீது பல்வேறு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2 வருடத்திற்கு முன்பு தடை செய்யப்பட்ட பல நிறுவனங்களில் சீனாவின் பேஷன் பிராண்டான SHEIN-ம் ஒன்று.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக், பப்ஜி உட்பட அனைத்து முன்னணி சீன நிறுவனங்களும் இந்திய சந்தைக்குள் வரும் மாற்று வழியை விடாமல் தேடி வரும் வேளையில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் சீனாவின் SHEIN கூட்டணி குறித்த தகவலை ஒரு நிர்வாக அதிகாரி தெரிவித்தாக எக்னாமிக்டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் - SHEIN மத்தியிலான ஒப்பந்தம் மூலம், SHEIN பிராண்ட் இந்தியாவில் இருந்து தனது உலகளாவிய வர்த்தகத்திற்கு தேவையான பொருட்களை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் SHEIN பிரண்டு இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
SHEIN இந்தியாவில் மிகவும் மலிவான விலை ஆடை மற்றும் பேஷன் பொருட்களை தனது சொந்த ஆப் வாயிலாக இந்தியா முழுவதும் விற்பனை செய்து வந்தது. இந்த தளம் இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது, இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டில் தற்போது டிராண்டாகி கொண்டு இருக்கும் ஆடை மற்றும் பேஷன் பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் காரணத்தால் 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்தது.

ரிலையன்ஸ் ரீடைல் - SHEIN புதிய கூட்டணியில் இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்குவது மட்டும் அல்லாமல் தனது பொருட்களை ரிலையன்ஸ் டிரென்ஸ் கடைகளின் வாயிலாக விற்கவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரையில் உறுதி செய்யப்படாது.


Click it and Unblock the Notifications