சீனாவின் மக்கள் வங்கியின் சமீபத்திய தரவானது கடந்த மாதம் 18 டன் தங்கத்தினை வாங்கியதாக காட்டுகின்றது. இது சீனாவின் தங்கத்தின் மீதான மோகம் என்பது இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.
சீனாவின் தங்க ஷாப்பிங் என்பது தொடர்ந்து 5வது மாதமாக நீடித்து வருகின்றது.

இது குறித்து மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தை ஆய்வாளரான கிரிஷன் கோபால், நவம்பர் முதல் நாடு 120 டன் தங்கத்தினை வாங்கியுள்ளது. தற்போது 2068 டன் தங்கத்தினை கையிருப்பில் வைத்துள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிபுணர்களும் விலைமதிப்பற்ற உலோக சந்தையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை உறுதியான தாக்கத்தினை எதிர்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், தங்கம் விலையானது புதிய உச்சத்தினை எட்டலாம். குறிப்பாக நிலவி வரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், நிதி சந்தையானது தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இது தங்கத்திற்கு மேலும் ஆதரவாக அமையலாம்.
சீனாவின் சமீபத்திய தங்கம் விலையானது 7%-க்கும் அதிகமாக உயர்ந்தது. கடந்த மாதம் அதிகபட்சமாக மிகப்பெரிய உச்சத்தினை எட்டியது.
யுவான் சர்வதேச அளவில் மிகப்பெரிய நாணயமாக உருவெடுத்து வரும் நிலையில், தொடர்ந்து தனது தங்க இருப்பினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தொடர்ந்து டாலரின் மதிப்புக்கு போட்டியாக உருவெடுத்து வரும் நிலையில், தொடர்ந்து சீனாவின் யுவான் உருவெடுத்து வருகின்றது. மொத்தத்தில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
தொடர்ந்து அரசியல் பதற்றமும் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் என்பது அதிகரிக்கலாம்.

குறிப்பாக சீனாவில் தொடர்ந்து 11வது மாதமாக தங்கம் இருப்பானது உயர்ந்து வருகின்றது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 52 டன் உயர்துள்ளது என உலக தங்க கவுன்சில் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. ஆக இந்த போக்கானது வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரையில் மத்திய வங்கியின் நிகர கொள்முதல் ஆனது 125 டன்னாக உள்ளது. இது 2010-க்கு முந்தைய வலுவான தொடக்கமாகவும் உள்ளது. மத்திய வங்கிகள் வருடாந்திர அடிப்படையில் நிகர வாங்குபவர்களாக மாறியது.


Click it and Unblock the Notifications