டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் காரணமாக உலோக சந்தையில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 1.6 சதவீதம் வரையில் உயர்ந்து 4600 டாலரை தொட்டு உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 2.2 சதவீதம் வரையில் உயர்ந்து 69.9 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஈடிஓ மார்கெட்ஸ் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரியான ஜோனதன் பாரட் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு மொத்த சந்தையை அதிர வைத்துள்ளார்.

கடந்த 6 மாதமாக ஈரான் போர் நடக்கும் காலக்கட்டத்தில் எப்போதெல்லாம் டாலர் மதிப்பில் பெரும் சரிவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தங்கம், வெள்ளி விலை உயர்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒவ்வொரு முறையும் தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலை அதிகமாக உயர்வை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க நாணய கொள்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் தங்கத்தை காட்டிலும் வெள்ளி விலை வேகமாக உயர்ந்து விரைவில் வெள்ளி 100 டாலரை எட்டும் என தெரிவித்துள்ளார் ஜோனதன் பாரட். இந்த அதிரடி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது சீனா தான் என்றும் அடித்து கூறுகிறார்.
வெள்ளி விலை தற்போது 70 டாலருக்கு அருகில் வர்த்தகமாகி வரும் நிலையில், விரைவில் 75 டாலர் என்ற முக்கிய பென்ச்மார்க் நிலையை எட்டும், அதன் பின்பு 100 டாலர் அளவீட்டை மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் எட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி வளர்ச்சிக்கு முக்கிய தூணாக சீனாவில் அதிகரிக்கும் வெள்ளிகான டிமாண்ட் மற்றும் உலகளவில் சோலார் பேனல் போன்ற பசுமை தொழில்நுட்ப துறையில் அதிகரிக்கும் தேவையின் காரணமாக வெள்ளி உலோகத்திற்கான டிமாண்ட் உருவாகும் என ஜோனதன் பாரட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சீனாவில் வெள்ளி தாதுவின் இறக்குமதி 62 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளை அடிப்படையாக வைத்து ஜோனதன் பாரட் வெள்ளி அதிகளவில் உயரும் என கணிப்பதாக தெரிவித்துள்ளார். வெள்ளி மட்டும் அல்லாமல் தங்கமும் விரைவில் 5000 டாலரை எட்டும் என கணித்துள்ளார்.

இதேவேளையில் டாலர் மதிப்பு தற்போதைய 95 ரூபாயில் இருந்து 101 ஆக உயரும் எனவும் கணித்துள்ளார், இதனால் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் 2026 முடிவதற்குள் ஒரு அவுன்ஸ் 6000 டாலர் வரையில் உயரும் என ஜேபி மோர்கன் கணித்துள்ளது, இதேபோல் கோல்டுமேன் சாக்ஸ் 5400 டாலர் வரையில் உயரும் என கணித்துள்ளது.
இந்தியாவில் இது பண்டிகை காலம் + திருமண சீசன் என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கிறது, இதனால் டிஸ்கவுன்ட் விலையில் விற்கப்பட்டு வரும் தங்கம், வெள்ளி விலை ப்ரீமியம் விலையில் உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications