சீனா வேலையைக் காட்டியது.. தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்துள்ளது.. அமெரிக்கா ஷாக்..!

உலகமே அமெரிக்கப் பத்திர சந்தையிலும், ஏஐ பங்குகளிலும் முதலீடு செய்து வரும் வேளையில் சீனா தொடர்ந்து தங்கத்தை முக்கியமான முதலீடாக வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் 10 ஆண்டு அரசு பத்திர முதலீட்டின் மீதான வட்டி வருமானம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த காரணத்தால் பல நாடுகளின் மத்திய வங்கி இதில் முதலீடு செய்தது.

ஆனால் சீனா மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை முக்கிய

 சீனா வேலையைக் காட்டியது.. தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்துள்ளது.. அமெரிக்கா ஷாக்..!
முதலீடாகப் பார்த்து வருவது, டாலருக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனா உறுதியாக இருப்பதை காட்டுகிறது.

இன்று சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China வெளியிட்டுள்ள தரவுகள் படி சீனாவின் தங்க இருப்பு அக்டோபர் மாதம் மட்டும் 8,30,000 அவுன்ஸ் அதிகரித்து மொத்த தங்க இருப்பு 78.30 மில்லியன் அவுன்ஸ் ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனாவின் மொத்த தங்க இருப்பு 2,436 டன் ஆக உயர்ந்துள்ளது.

சீனா மத்திய வங்கி கடந்த 2 வருடங்களாக அதாவது தொடர்ந்து 24 மாதங்களாகத் தங்க இருப்பை அதிகரித்து வருகிறது, 2026ஆம் ஆண்டில் 10 மாதத்தில் மட்டும் சுமார் 129 டன் அளவிலான தங்கத்தை வாங்கி சேமித்துள்ளது.

இதேவேளையில் அக்டோபர் மாதம் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் 7 சதவீதம் வரையில் சரிந்து முதல் முறையாக ஒரு அவுன்ஸ்-க்கு 4000 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது.

மேலும் வோல்டு கோல்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் மாதம் உலகிலேயே அதிகம் தங்கம் வாங்கிய மத்திய வங்கிகளில் முதல் இடத்தில் சீனா உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் போர் மூலம் ஏற்பட்ட தடுமாற்றத்திலும் தங்கம் விலை பெரியளவில் குறையாமல் இருக்க முக்கியமான காரணம் மத்திய வங்கியின் தொடர் கொள்முதல் தான், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதைக் குறைத்திருந்தாலோ அல்லது நிறுத்தியிருந்தாலோ தங்கம் விலை 3900- 3800 டாலர் வரையில் குறைந்திருக்கும்.

தங்கம் விலை அக்டோபர் மாத சரிவின் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருட சரிவைப் பதிவு செய்துள்ளது, ஆனால் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு தங்கம் விலை உயர துவங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 0.46 சதவீதம் சரிந்து 4,070.31 டாலராக உள்ளது.

இதுவே சென்னை ரீடைல் சந்தையில் தீபாவளி தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 22 ரூபாய் உயர்ந்து 14,357 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் உயர்ந்து 13,160 ரூபாயாகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+